உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கையோ அல்லது வேறு ஏதாவது உறுப்போ துண்டு துண்டாகக் காணப்படினும் காணப்படலாம். ஆண்தேள் ஆட்டியபடியெல்லாம் ஆடிக்கொண்டு ஒன்றும் செ-யாது சும்மாயிருந்த பெண்தேளானது, ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்தில், மேல் நடக்க வேண்டிய வீட்டுக் காரியங்களையெல்லாம் புருஷத் துணையின்றித் தானே நடத்த வேண்டும் என்று தீர்மானித்துவிட்டது போல் தோன்றுகிறது. முதற் படியில் தன் புருஷனையே விடியற்காலச் சிற்றுண்டியாகத் தயார் செ-து காலைப் போஜனத்தை முடித்துக் கொள்ளுகிறது. ஏதாவது எஞ்சியிருந்தால்தான், நாம் ஆண்தேளின் உடலின் சின்னங்களைச் சிலவேளைகளில் காண நேர்கிறது. தன்னுடைய கையை இறுகப் பற்றியிருந்த ஆண்தேளைப் பெண்தேளானது எப்படித் தாக்கித் தோல்வியுறச் செ-து கொல்லுகிறது என்பது தெரியவில்லை. எனினும், மணம்புரிந்த மறுநாட் காலைக்குள், ஆண்தேள் பிணமாகிப் பெண் தேளுக்கு இரையா-விடுகிற தென்பதில், சிறிதும் ஐயமே யில்லை. மண அறை பிண அறையாக மாறுகிறது. உலகத்தில் நடை பெறும் அற்புதங்களுள் இதுவும் ஒன்று."

பெ. நா. அப்புஸ்வாமி

இது, ஆண்தேள் மணம்புரிந்தபின் அடையும் நிலைமையைப் பற்றியது. இதன் முதல்வாக்கியம், படிப்போர் மனத்தில் ஒரு சிறு கலக்கத்தை யுண்டுபண்ணி அவ் வேட்கையைக் கிளப்புகின்றது. இடை வாக்கியங்கள், நிகழ்ந்ததைச் சொல்லி அவ் வேட்கையைத் தணிக் கின்றன. இறுதி வாக்கியம் படிப்போர்க்கு இயல்பா எழும் வியப் புணர்ச்சியோடொத்த கூற்றாக நின்று, பாகிப்பொருளை உணர்ச்சியுற முடிக்கின்றது.

4 "எறும்பானது கிடையாத காலத்துக்கு உதவுமாறு, கிடைத்த காலத்தில் உணவிற்கு உரியவற்றைச் சேர்த்து வைத்துக்கொள்கின்றது. வெ-யிற் காலத்தில் பயிர்பச்சைகளுக்கு ஆகும்படி, மாரிகாலத்தில் ஏரிகுளங்களை நீர்நிரப்பி வைத்துக்கொள்கிறோம். ஓடுகிற ஆறு ஓடிக் கொண்டே இராது. ஓடம் விட்ட ஆற்றிலும் அடி சுடும். ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு. ஆகவே, மனிதனானவன் கார்காலத்தில் இன்புற்று வாழ்வதற்கு ஆவனவற்றைக் கோடை காலத்தில் தானே தேடிவைத்துக் கொள்ளவும், இரவில் சுகமாக உண்டுறங்குவதற்கின்றி யமையாதனவற்றைப் பகற்காலத்தில்தானே சம்பாதித்து வைத்துக் கொள்