உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

49

ளவும், முதுமைப் பருவத்தில் முட்டுப்பாடின்றி உண்டு உயிர் வாழ்வ தற்கு வேண்டுமவைகளை இளமைப்பருவத்தில்தானே ஈட்டி வைத்துக் கொள்ளவும், முயற்சி செ-யக்கடவன். "பொருடனைப் போற்றி வாழ்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

வருமுன் காப்பவன் புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினதுபோல், சிலர் என்ன சொன்னாலும் கேட்காமல், முன்பின் பாராமல், 'ஊதாரிக் குப் பொன் துரும்பு' என்றபடி, கையிற் கிடைத்த பொருளை யெல்லாம் செலவழித்துவிட்டு, எ-ப்பில் வைப்பின்றி இடர்ப்படுவர். பிணியினா லேனும், முதுமையினாலேனும் வேறு இடையூறுகளா லேனும் பொருள் தேடும் வழி இல்லாதபொழுது, ஒரு காசு கிடைப்பது குதிரைக் கொம்பாகிப் பெண்டிர் பிள்ளைகளோடு இடருறுவர்.'

T. செல்வக்கேசவராய முதலியார்

இது, வருங்காலத்திற்குத் தேடிவைத்துக் கொள்வதைப் பற்றியது. இதன் முதல் வாக்கியம், நாம் பின்பற்ற வேண்டிய ஓர் உயிரியின் (பிராணியின்) செயலைக் கூறுமுகமாக, நம் கவனத்தை இழுக்கின்றது. இடைவாக்கியங்கள், பின்பற்றும் முறையை எடுத்துக்காட்டும் ஏதுவுங் கொண்டு விளக்குகின்றன. இறுதி வாக்கியம், பின்பற்றாவிடின் நேரும் இடர்ப்பாட்டைக் கூறி எச்சரிக்கின்றது.

(ii) புறவொழுங்கைக் காட்டும் தொகுதிப் பாகிகள்

66

போலிகை (மாதிரி)

'கடைச்சங்க காலத்திலே, அஃதாவது கி.பி. 500-க்கு முன்னே, சோழநாட்டின் துறைமுகப்பட்டினமாகவும் தலைநகரமாகவும் இருந்தது காவிரிப்பூம்பட்டினம். குடிவளம் செழித்துப் பொருள்வளம் பெருகி நாகரிகத்தில் சிறந்து உலகமெங்கும் புகழ்பெற்று விளங்கிய காவிரிப் பூம்பட்டினம் புகார்ப்பட்டினம் என்றும், புகார் என்றும், பூம்புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கூடுகிற இடமாக லின் இந் நகரம், புகார் என்றும் பூம்புகார் என்றும் பெயர் பெற்றது.

தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும் மலியோ தத்து ஒலிகூடல்

(பட்டினப்பாலை. 97-8)