உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

என்று இந்த இடத்தைப் பட்டினப்பாலை கூறுகிறது. இதற்கு உரை கூறுகிற நச்சினார்க்கினியர், "தெளிந்தகடல் திரையோடே காவிரி தலைகலக்கும் ஓதத்தினால் ஒலிமலிந்த புகார்முகம்” என விளக்கு கிறார். எனவே, காவிரியாறு கடலில் புகுகிற இடமாகலின், இதற்குப் புகார் என்று பெயர் வந்தது என்பது தெளிவாகிறது.

"காவிரிப்பூம்பட்டினத்தை டாலமி என்னும் யவன ஆசிரியர் சபரிஸ் (Chabaris) என்று கூறுகிறார். பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலாசிரியர் இந் நகரத்தைக் கமர (Kamara) என்கிறார். இந்த ஆசிரியர்கள் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்தவர்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்துக்கு வந்த சீனநாட்டுப் பௌத்த ராகிய யுவாங் சுவாங் என்பார், இந் நகரத்தைச் சரித்ரபுரம் என்று கூறுகிறார். பாலி மொழியில் எழுதப்பட்ட பழைய பௌத்த நூல் களிலே காவிரிப்பூம்பட்டினம் கவீரபட்டினம் என்று கூறப்பட்டுள்ளது.”

"கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே இந்த நகரம், கடல் கொந்தளிப்பினாலும் வெள்ளப் பெருக்கினாலும் பெருஞ் சேதத்திற் குள்ளாயிற்று. இவ் வெள்ளச் சேதத்திற்குப் பிறகு, மீண்டும் இந் நகரம் பெருமையுடனும் செல்வச் சிறப்புடனும் விளங்கிற்று. முற்காலத்திலே உலகம் போற்றும் பெருமை வா-ந்திருந்த இப்பட்டினம், கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு பிறகு பெருமை இழந்து நாளடைவில் வளம் குன்றி இப்போது சிறு குக்கிராமமாக இருக்கிறது. சங்க காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும், மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் உடைய தா-, குடிவளம் பெருகிப் பொருள்வளம் செழித்து நாகரிகத்துக்கு உறைவிடமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் குக்கிராமமாகி ஒதுக்குண்டிருக்கிறது. பண்டைக் காலத்திலே, இந்தப் பட்டினத்தில் சோழமன்னர்களும் பெருங்குடி மக்களும் பெருமையுடன் வாழ்ந்திருந்தார்கள். கடைச் சங்க காலத்தி லே, கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலே இருந்த சிலப்பதி காரக் காவியத் தலைவராகிய கோவலனும் கண்ணகியாரும் இந்தப் பட்டினத்திலே வாழ்ந்திருந்தார்கள். ஆடல்பாடல்களில் பேர்போன மாதவி என்னும் கலைச்செல்வி வாழ்ந்திருந்த இடமும் இப் பட்டினமே. மாதவியின் மகளும் மணிமேகலை காவியத்தின் தலைவியுமாகிய, மணிமேகலை யார் பிறந்து வாழ்ந்த இடமும் இந் நகரமே. சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இருபெருங் காவியங்களின் தலைவர் கள் பிறந்து வாழ்ந்த