உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

51

காவிரிப்பூம்பட்டினம், சிறந்த நகரமாகத்தானே இருக்க வேண்டும்? ஆகவே, காவிரிப்பூம்பட்டினத்தின் பண்டைய சிறப்பை ஆரா-வோம். அஃதாவது, கி.பி. 300 ஆண்டுகட்கு முன்பு இருந்த பட்டினம் எவ்வாறு அமைந்திருந்தது. தரையமைப்பு (Plan) எவ்வாறிருந்தது, தெருக்களும் முக்கிய கட்டடங்களும் கோயில் களும் பூந்தோட்டங்களும் துறைமுகமும் எவ்வாறு அமைந் திருந்தன என்பதை ஆரா-ந்து பார்ப்போம். இந்த ஆரா-ச்சிக்குப் பேருதவியாயிருப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப் பாலை, புற நானூறு, அகநானூறு, நற்றிணை ஆகிய இந் நூல்களே யாம். இந் நூல் களின் துணைகொண்டு, புகார்ப்பட்டினம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைக் காண்போம்."

மயிலை சீனி. வேங்கடசாமி

முப்பாகிகளுள்ள இப் பகுதியில், முதற்பாகி காவிரிப்பூம்பட்டி னத்திற்குத் தமிழ்நாட்டில் வழங்கும் பெயர்களையும், இடைப்பாகி அதற்குப் பிற நாடுகளில் வழங்கும் பெயர்களையும், கடைப்பாகி அதன் பெருமைகளையும், எடுத்துக் கூறுகின்றன. இவை மூன்றும் ஏரண முறையில் பொருட் கோவைப்பட்டிருப்பதையும், இடைப் பாகி முன்னும் பின்னுமுள்ளவற்றோடு தொடர்புண்டிருப்பதையும், ஒவ் வொன்றும் வெற்வேறள

அதனதன்

பொருட்பரப்பிற்

வினதாயிருப்பதையும் நோக்குக.

கேற்றவாறு

போலிகை 2

"தமிழ்வளர்ச்சியிற் பேரார்வமுடைய பாண்டிய மன்னர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கங் களை நிறுவிக் கல்விப் பணிபுரிந்த காலம் 'சங்ககாலம்' என வழங்கப் பெறும். அக் காலப்பகுதி இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டு களுக்கு முற்பட்டதாகும். மக்கள் தங்கள் தா-மொழி வழியாக எல்லாக் கலைகளையும் வளர்க்க எண்ணி, அரசியல் ஆதரவிற் புலவர் பேரவை யைக் கூட்டி அறிவினைப் பரப்பும் முறை, நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். இத்தகைய புலமைத் தொண்டினை, நம் தமிழ் முன்னோர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே மேற் கொண்டி ருந்தார்கள். அவர்களால் போற்றப்பெற்று வளர்ந்த முச்சங்கங்களின் வரலாறு, இறையனார் களவியலுரையிலும், சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையிலும் விளக்கப்பெறுகின்றது.’

99