உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

நுண்ணறிவுடைய புலவர் பலரும் தமக்குள் மாறுபாடில்லாமல் ஒருங்குகூடித் தமிழாரா-ந்த புலவர் பேரவையே சங்கம் என வழங்கப் பெறுவதாகும். இதனை முன்னுள்ளோர் 'கூடல்' என்ற பெயரால் வழங்கினார்கள். மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான், பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கத்தினை 'நல்லாசிரியர் புணர்கூட்டு' என்ற தொடராற் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தப் பிள்ளையார், மதுரையில் தமிழ் வளர்த்த சங்கத்தினை 'மதுரைத்தொகை' என ஒரு திருப்பாடலில் குறிப்பிடுகின்றார். இத் தொடரில் வந்த 'தொகை' என்பது சங்கம் என்ற பொருளைத் தரும் தமிழ்ச் சொல்லாகும்.

"தமிழ்க் கல்விச் சங்கமாகிய பாண்டியன் அவையம், தொல் காப்பியம் அரங்கேறிய காலத்திற்கு (2,500 ஆண்டுகளுக்கு) முன் தொடங்கிக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முடிய, நெடுங்காலம் நிலை பெற்றுத் தமிழ்ப்பணி புரிந்து வந்தது. பாண்டியர்களால் நிறுவப்பெற்ற தமிழ்ச்சங்கத்தைப் போலவே. தமிழ்நாட்டிலுள்ள பேரூர்தோறும் தமிழ் வளர்க்கும் புலவர் பேரவைகள் தமிழ்மக்களால் நிறுவப் பெற்றிருந்தன. சங்க காலத்தில் எத்துணையோ தமிழ் நூல்கள் புலவர் பெருமக்களாற் இயற்றப்பட்டன. அவற்றுட் பெரும்பாலான, கடல் கோளாலும் தமிழர்களின் விழிப்பின்மையாலும் அழிந்துபோயின. அவை போக, இப் போது எஞ்சியுள்ளன சிலவே. இடைச்சங்கத்தில் வாழ்ந்த ஆசிரியர் தொல்காப்பியனாரால் இயற்றப்பெற்ற இயற்றமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமும், கடைச்சங்கத்துச் சான்றோர் களால் தொகுக்கப் பெற்ற பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பனவும், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியனவும், சங்க காலத்தில் இயற்றப் பெற்றனாக இப்பொழுதுள்ள தமிழ் நூல்களாம். இந் நூல்களை ஆராயுங்கால் சங்க காலத் தமிழகத்தின் பரப்பும், அரசியலமைதியும், நாகரிக வாழ்வும், நன்கு புலனாம். அவை ஈண்டு உரைக்கப்படும்."

வித்துவான் திரு. க. வெள்ளைவாரணர்

இப் பகுதியில், முதற் பாகி பாண்டியர் வளர்த்த சங்கங்களைப் பற்றியும் இரண்டாம் பாகி அச் சங்கங்களைக் குறிக்கும் தமிழ்ப்பெயர் களைப் பற்றியும், மூன்றாம் பாகி அச் சங்கங்களால் இயற்றப்பெற்ற நூல்களைப் பற்றியும் கூறுகின்றன. இவையும், முன்னவைபோலப் பொருளொழுங்குபட்டும் வெவ்வேறளவு கொண்டு மிருத்தல் காண்க.