உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

53

இனி, ஒரு பொருள்பற்றி மூன்றுக்கு மேற்பட்டு வரும் பாகிகளின் தொடர்பொழுங்கு அளவு வேறுபாடு முதலிய இயல்புகளை, அறிஞர் கட்டுரைகளிற் கண்டுதெளிக.

(iii) ஒற்றைப் பாகி வரைவு (The writing of Single Paragraphs)

இதுகாறும் ஓர் இயலின் அல்லது கட்டுரையின் பகுதிகளான பாகிகள் வரைவதைப்பற்றிப் பார்த்தோம். இனி, ஒரு பொருள்பற்றி ஒற்றைப் பாகி வரைதலும், மாணவர்க்கு, சிறப்பாகக் கீழ்வகுப்பு மாண வர்க்குத் தெரிந்திருத்தல் வேண்டும். ஒற்றைப் பாகி என்பது பொது வா-ச் சிறு பாகியாகும்.

ஒரு பொருள்பற்றி ஒரே சிறு பாகி வரையப்படின், அது முன்பின் தொடர்ச்சியற்றுத் தன்னில் தானே முற்றுப்பெறும் ஒரு சிற்றுக் கட்டுரையாகும். மேற்கூறிய பலபடு பாகிகட்குரிய நெறிமுறைகளுள், வகைப்பாடொழிந்த பிறவெல்லாம் இதற்கும் உரியனவாகும். இது மிகக் குறுகியதாயும் பெரும்பாலும் சிறு மாணவர்க்குரியதாயு மிருத்த லின், சிற்று வாக்கியங் கொண்ட எளிய நடையிலேயே எழுதப்படுதல் வேண்டும். மேல்வகுப்பு மாணவர் தேர்விலெழுதும் விடைகள் ஒற்றைப் பாகியா யமையுமாயின், அவற்றைத் தமக்கியல்பான நடை யில் எழுதலாம். ஒற்றைப் பாகியின் முதல் வாக்கியம், கருத்து வாக்கிய மாகவோ முகவுரை வாக்கியமாகவோ இருக்கலாம்.

ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியை அல்லது குணத்தை அல்லது கருத்தைப்பற்றி ஒற்றைப் பாகி வரையும்போது, வேண்டாத நுணுக்கங் களையும் சிறு புன்நிகழ்ச்சிகளையும் விட்டுவிடுதல் வேண்டும். உயி ருள்ள அல்லது உயிரில்லாத ஒரு பொருளைப்பற்றி வரைய நேரின், அதன் பல இயல்புகளில் ஒன்றையே தெரிந்துகொண்டு அதனைப் பற்றி வரைதல் வேண்டும்.

பாகி மிக நீளாதவாறு, மேற்கோள்கள், அணிகள், வேண்டாச் சொற்கள் முதலியவற்றை விலக்குதல் நல்லது. ஒற்றைப் பாகியின் பேரெல்லை காற்பக்கம் அல்லது 15 வரி என்னலாம்.

1. எறும்பு

எ-டு. இந்தியராகிய நாம், மேனாட்டாரின் ஒழுங்கையும் கட்டொழுங்கையும் (Dis- cipline) அடிக்கடி வியக்கின்றோம். ஆனால் மேனாட்டாரும் வியக்கத் தக்க ஒழுங்கும் கட்டொழுங்கும் ஓர் அஃறிணைச் சிற்றுயிரின் பால் சிறக்க அமைந்துள்ளன. அஃது எறும்பு என்பது உங்கட்குச் சொல்லாமலே