உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தெரியும். எறும்பிற் பலவகையுண்டு. அவற்றுள் எதை நோக்கினும், இவ்வொழுங் கையும் கட்டொழுங்கையும் காணலாம். எறும்புகள் அவ்வக் காலத்திற் செ-ய வேண்டிய வினைகளை அவ்வக் காலத்தே செ-துமுடிக்கின்றன. எங்குச் சென்றாலும் வரிசையாகவும் நேராகவும் செல்கின்றன; நெருக்கடியான சமையங்களில் பல வரிசை யாகவும், மற்றச் சமையங்களில் ஒரு வரிசை யாகவும் செல்கின்றன. ஒற்றரை ஏவி முன்னதாக நன்மை தீமைகளை அறிந்துகொள்கின்றன. வரிசையில் முன் செல்லும் தலைமை யெறும்பு, ஒற்றர் வாயிலா-த் தீமையறிந்த வுடன், மற்ற எறும்புகளை வந்த வழியே விரைந்தோடி வளைக்குள் செல்லுமாறு ஏவித் தானும் திரும்பு கின்றது. அதோடு எல்லா எறும்புகட்கும் விரைந்து செ-தி தெரியுமாறு, அறிவிப்ப ளராகப் பல எறும்புகளை வரிசை நெடுக அனுப்புகின்றது. இத்தகைய செ-திகள், மேனாட்டார்க்கு வியப்பையும் நமக்கு வெட்கத் தையும் விளைப்பனவாகும்.

இவ் வொற்றைப் பாகியிற் கூறப்பட்ட எறும்பின் இயல்பு ஒழுங்கு என்பது வெளிப்படை.

2. ஒரு புகைவண்டித் துன்ப நேர்ச்சி

எ-டு. மக்களின் பொதுப்படை யூர்திகள் எல்லாவற்றுள்ளும் புகைவண்டி மிகப் பாது காப்பானது என்பது எல்லாருக்கும் நம்பிக்கை. ஆனால், அதிலும் சில சமையங்களில் எதிர்பாராத பெருந்துன்பங்கள் நேர்ந்து விடுகின்றன. 1937ஆம் ஆண்டில் பெருமழை பெ-து வெள்ளம் வந்த மாரிநா ளொன்றில், மாலைநேரத்தில், மணற்பாறைக்குத் தெற்கே யுள்ள அ-யலூர் அருகில், திருச்சியிலிருந்து மதுரைக்குச் சென்று கொண்டிருந்த புகைவண்டியின் இயற்திரம் திடுமென்று நிலத்திற்குள் பா-ந்துவிட்டது. ஆதனால், அதனையடுத்துள்ள சில கூண்டுகள் (carriages) அதே நொடியில் சின்ன பின்னமாகச் சிதைந்து விட்டன. அவற்றிலிருந்த வழிப்போக்கர் பெரும்பாலும் மாண்டு உருத் தெரியாமல், போயினர். பிற கூண்டுகளிலிருந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இக்கோரக் காட்சியைக் கண்டவர் சிலர், நெடுநாள் மதி மயங்கியிருந்தனர். இத்தகைய துன்பங்கள் மீண்டும் நிகழாதவாறு, அடிக்கடி தண்டவாளங்களைக் கவனிப்பதுடன், மாரிநாளிலும் கலகக் காலத்திலும் சிறந்த பாதுகாப்பமைத்து, புகைவண்டி வலவனையும் (driver) விழிப்பாயிருக்கச் செ-வது, இருப்புப்பாதை யதிகாரிகளின் கடமையாகும்.

3. பொ -யாமை

எ-டு. பொ-யாமை என்பது பொ- சொல்லாமை. பொ- சொல்வது, உண்மையை மறைத்தலும் உண்மை சொல்ல மறுத்தலும் என இருவகைப்படும். மனிதனுக்குத் தன்னலமும் மானவுணர்ச்சியும் துன்பங்கண்டு தளர்தலும் உள்ளவரை, அவன் பொ-சொல்லாமலிருத்தல் முடியாது. சில சமையம்,