உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

55

பொ-யால் நன்மையும் மெ-யால் தீமையும் விளை கின்றன. நன்மை விளைக்கும் பொ-யையும் மெ-யாகக் கருத வேண்டும். ஆகவே, பொ- சொல்லாதிருத்தல் அரிதென்பதும், ஒருவருக்கும் ஒரு தீங்கும் விளைக்காத சொல்லைச் சொல்வதே மெ- என்பதும் அறியப்படும்.

மேற்காட்டிய மூன்று எடுத்துக்காட்டுகளும், முற்கூறிய ஒற்றைப்பாகி விதிகட்கேற்ப அமைந்திருத்தல் காண்க. அவற்றுள், முதலி ரண்டும் காட்சிப் பொருள் பற்றியன. அவற்றின் முதல் வாக்கியங்கள் முகவுரை வாக்கியங் களாக வுள்ளன. இறுதியது, கருத்து அல்லது சிந்தனைப் பொருள் பற்றியது. அதன் முதல் வாக்கியம் பாகிக் கருத்து வாக்கியமாகவுள்ளது.

பயிற்சி

கீழ்க்காணும் பொருள்களைப்பற்றி ஒற்றைப் பாகிகள் வரைக.

1. நா-. 2. பூனை. 3. ஆவு. 4. தெருத் துன்பநேர்ச்சி. 5. நிலநடுக்கம் (பூகம்பம்). 6. வெள்ளச் சேதம். 7. அன்பு. 8. பொறுமை. 9. சினம். 10. நட்பு. 11. நற்பழக்கம். 12. பன்மொழியிற் பேசல். 13. கடல். 14. மலை. 15. ஆறு.

3. கடிதவரைவு (Letter - Writing)

கடிதவரைவு முறையைச் சிலர் முக்கியமாகக் கருதுவதில்லை. வேலைப்பேற்றிற் கேதுவான விண்ணப்பமும் பரிந்துரையும், பேரூதி யத்திற்கேதுவான வணிக எழுத்துப் போக்குவரத்தும், பெருநன்மைக் கேதுவான எழுதப்பட்ட முறையீடும் பிற வேண்டுகோளும் கடித வகைகளே. ஆங்கிலம்போன்ற அயன்மொழியிற் கடிதம் வரையும் முறையை எவ்வளவு கருத்தாகக் கவனிக்கின்றோமோ, அவ்வளவு கருத்தாகத் தா-மொழியாகிய தமிழில் வரையும் முறையையுங் கவனித் தல் வேண்டும்.

ஒருவகையில், கடிதம் என்பது எழுதப்படும் பேச்சே. ஒருவருக்கு முன்னிலையிலிருந்து திறமையாகவும் தெளிவாகவும் முறைமையாகவும் இனிமையாகவும் பேசுவதாற் பெறக்கூடிய பயன் களை, தொலைவி லிருந்து அங்ஙனம் எழுதுவதாலும் பெறுதல் கூடும். சொல்வன்மை, கன்மனத்தையும் கனியவைத்து ஆகாத காரியங் களையும் ஆக்கு விக்கும். அங்ஙனமே எழுத்து வன்மையும்.