உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கடிதவரைவு சிலரால் ஒரு கம்மியாகவும் (Art) வளர்க்கப் பெற்றுள் ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் சிசரோ என்னும் அறிஞர் வரைந்த இலத்தீன் கடிதங்கள், இன்று கற்றோர் உள்ளத்திற்கு இன்ப விருந்தாக வுள்ளன; ஆதலால் இலக்கியம்போற் போற்றப்பட்டு வரு கின்றன. கற்றாரெல்லாம் இத்தகைய கடிதம் பயிலவும், முயலவும் வேண்டும்.

1. கடித வடிவம் ( The Form of Letters)

கடிதங்கள் பலவகைப்படும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனி வடிவுண்டு. ஆயினும், கடிதவுறுப்புகள் எல்லா வகைக்கும் பொதுவாம்.

1. தலைப்பு ( Heading)

2. கொளு

3. விளி (Greeting or Salutation)

4. செ-தி (Communication or Message)

5. உறவுத் தொடர்மொழி (Subscription or Leave taking)

6. கைந்நாட்டு (Signature)

7. முகவரி (Address or Supersceription on the envelope)

என ஏழு.

இவற்றுள், விளியும் உறவுத் தொடர்மொழியும், அவ்வக்கடித வகைக் கேற்ற முறையில், சிற்சில மரபுச் சொல்லாகவும் சொற் றொட ராகவும் அமைவன. பிறவுறுப்புகள், வெவ்வேறு சொற்களாலும் சொற் றொடர்களாலும் அமையினும், ஒவ்வொரு பொது வா-பாட்டை அல்லது முறையைத் தழுவினவை.

1.தலைப்பு

எவ்வகைப்பட்டதாயினும் ஒவ்வொரு கடிதத்திலும், அது எழுதப் பட்ட இடமுந் தேதியும் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். உறவும் நட்பும் வணிகமும்பற்றி யெழுதும் கடிதங்களிலெல்லாம், முதற்பக்க வலப்புற மேன்மூலையில், இடம் மேலும், தேதி கீழுமாக எழுதப் பட்டிருத்தல் வேண்டும். இங்கு இடம் என்றது பெயர் ( இயற்பெயரும் பதவிப் ( பெயரும்) ஒழிந்த முகவரியை.

எ-டு:

117, தம்புச்செட்டித் தெரு, சென்னை,

23 ஏப்பிரல், 1943