உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

மாதத்தையும் எண்ணாற் குறிப்பிடுவதே பெருவழக்கு.

எ-டு:

23-4-1943

ங்கிலத் தேதிக்குப் பதிலாகத் தமிழ்த் தேதியுங் குறிப்பிடலாம்.

எ-டு:

4, ஆவணி, விகாரி

ஆவணி, 4 விகாரி

விகாரி, ஆவணி4

விகாரி வருஷம் ஆவணி மாதம் 4ஆம் தேதி

தொழின்முறைக்

கடிதங்களிலெல்லாம்

குறிக்கப்பெறுதல் வேண்டும்.

ஆங்கிலத்

57

தேதியே

ஆவணங்களில் இருவகைத் தேதியுங் குறிக்கப்பெறும்.

எ-டு: விகிர்தி வருஷம் புரட்டாசி மாதம் 10ஆம் தேதிக்குச் சரியான ஆங்கிலம் 1950ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி.

1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதிக்குச் சரியான தமிழ் விகிர்தி வருஷம் புரட்டாசி மாதம் 10ஆம் தேதி.

விண்ணப்பங்களிலும்

முறையீடுகளிலும்

நற்சான்றிதழ்களிலும்

சிலவகை முறிகளிலும், இடந்தேதி, இறுதிப் பக்க இடப்புறக் கீழ் மூலை யில்தான் குறிக்கப்பெறும். இங்கு இடம் என்பது ஊர்ப்பெயர் மட்டும்.

எ-டு:

சேலம்

8-2-'49

கையெழுத்தாகவுள்ள பற்றுச் சீட்டுகளில், இடம் செ-தித் துவக் கத்திற் கூறப்பட்டுவிடுமாதலால், தேதி மட்டும் இறுதியில் கைந் நாட்டின்கீழ்க் குறிக்கப் பெறுவதுண்டு.

எ-டு:

பொன்னையாப் பிள்ளை 3-7-'48

இடவாரியாகவும் காலவாரியாகவும் கடிதங்களைப் பிரித்தற்கும், குறித்த காலத்திற்குள் விடை விடுத்தற்கும், கடிதம் விடுத்தோரின் முகவரியறிதற்கும், இடந்தேதி வரைவு உதவுமாதலால், அவற்றைத் தவறாது குறித்தல் வேண்டும்.

2. கொளு

தலைப்பிற்குச் சற்றுக் கீழாக, இன்னாரிடமிருந்து இன்னாருக்கு என்றாவது, இன்னார் இன்னாருக்கு எழுதுவது என்றாவது, செ-தி தொடங்குமுன் வரையப்பெறும் முகவுரை கொளுவாகும்.