உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு: திருநெல்வேலி மாவட்டத் தண்டலாளர் (Collector) அவர்கட்கு, பாளையங் கோட்டைத் திரு. யோவான் (St. John's) உயர்நிலைப்பள்ளி 6ஆம் படிவ மாணவன் அருளப்பன் எழுதுவது (முறையிடுவது, விண்ணப்பித்துக் கொள்வது, தெரிவிப்பது):

சென்னை மாகாணக் கல்வியமைச்சராகிய நான் இம் மாகாணத் தமிழாசிரியர்க்கு அறிவிப்பது யாதெனின் (என்னவெனில்):

சோழன் குலோத்துங்கன் விடுக்கும் ஓலை (திருமுகம், ஆணை). செங்கேணி அத்திமல்லன் வீராண்டனான எதிரிலிச்சோழச் சம்பு வராயன் காண்க:

அருமை மகன் சீராளனுக்கு உன் அன்புள்ள அன்னை எழுதுவது:

உறவாடற் கடிதங்களிலும் வணிகக் கடிதங்களிலும் உள்ள கொளு, சுருக்கம்பற்றி, கடிதம் விடுப்போரைக் குறியாது கடிதம் விடுக்கப்பெறு வோரைமட்டும் குறிப்பதுண்டு.

எ-டு: அருமை அத்தான் அவர்கட்கு எழுதுவது:

அருமைத் தம்பி ஆவிடையப்பனுக் கெழுதுவது:

திருவாளர் திருவரங்கம் பிள்ளை அவர்கட்கு:

நண்பருக்கும்

அறிமுகமாகாதவர்க்கும்

எழுதும் உறவாடற்

கடிதங்கள், பெரும்பாலும் கொளுவில்லாமலே அமையும்.

(3) விளி

கொளுவிற்குக் கீழாக, இடப்புறத்தில், தனியா-, கடிதம் விடுக்கப் படுவோரை விளிப்பது விளியாகும்.

உறவினர்க்கெழுதும் கடிதங்களில்

உறவின்முறைப் பெயரே

விளிக்கப்பெறும். அது உயர்வு குறிப்பின் உயர்வுப்பன்மைப் பெயராக வும், உயர்வு குறியாவிடின் ஒருமைப்பெயராகவும், இருக்கும்.

எ-டு: உயர்வு விளி தந்தையீர்,

உயர்வில் விளி

தந்தா-,

அன்னையீர்,

அன்னா-,

மாமனாரே,

மாம்,

தமையனாரே,

தமைய,

தம்பீயீர்,

தம்பீ,

தமக்கையீர்,

தமக்கா-,

தங்கையீர்,

தங்கா-,

'மாமனீர்', 'தமையனீர்' முதலிய வடிவங்கள் இலக்கணத் தோடி

சையுமேனும், வழக்கின்மையின் உரைநடைக்கேலா.