உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

ஆண்பால்:

61

பெரும, பெரியோ-, பெருமானே, எம்பெருமானே,

எம்பிரானே, தலைவ, பெரியீர், தலைவீர், பெருந்தகையீர்.

பெண்பால்: பெருமாட்டீ, எம்பெருமாட்டீ, எம்பிராட்டீ, பிராட்டீ, பிராட்டியீர், தலைவீ, தலைவியீர்,

பெரியீர் பெருந்தகையீர் என்னும் விளிகள் இருபாற் பொதுவாம்.

ஆர்வமும் வணக்கமுங் குறித்தற்கு, மேற்காட்டிய விளிகளுடன் வேண்டிய அடைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

துறவியரைப் பின்வருமாறு விளித்தல் வேண்டும்.

அடிகாள்,

அன்பார்ந்த அடிகாள்,

பகவரீர்,

வணிகக் கடித விளி பெரியோரை விளிக்கும் விளியே.

எ-டு. ஐயா,

4.செ-தி

ஐயன்மீர்,

(ஒருமை)

(பன்மை)

விளிக்குக் கீழாக வரையப்படுவது செ-தி. அதன் அளவும் பொருளும், அவ்வக் கடிதவகையையும் எழுதுவோரின் கருத்தையும் பொறுத்தன.

எல்லாக் கடிதவகைகட்கும் பொதுவாக, செ-தியைப்பற்றிக் கவனிக்க வேண்டிய ஐந்து குறிப்புகள் உள. அவையாவன:

(i) பகுப்பு: செ-தி நீண்டதாயும் பல கருத்துப்பற்றிய தாயு மிருப்பின், படிப்போர்க்கு எளிதா- விளங்குமாறும், ஏரணத் தொடர்ச்சி யான கருத்து வேறுபாடு தெரியுமாறும், பல பாகிகளாகப் பகுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.

(ii) நடைச்சிறப்பு: பொதுவாகச் செ-தியை, எளிய இனிய தெளிவான சிறுவாக்கிய நடையில் எழுத வேண்டும். சட்டமுறைப்படி வரையப்படும் ஆவணங்களிலும், வணிகக் கடிதங்களிலும், அவ்வம் மரபான நடையே தழுவப் பெறல் வேண்டும். உறவினர்க்கும் நண் பர்க்கும் வரையுங் கடிதங்கள் பேச்சுநடையி லிருக்கலாம். ஆயின், இலக்கணப்பிழை யிருத்தல் கூடாது. கற்றோர்க்கு வரையுங் கடிதங்கள் எத்துணைக் கடுநடையிலும் இருக்கலாம். ஆயின், இரட்டுறலும் கவர்படு பொருண்மொழியும் இல்லாதிருத்தல் வேண்டும். பிறருக்குத் தெரியாத மரூஉ, இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி, சொற் குறுக்கம் முதலியவற்றையும் விலக்குதல் வேண்டும்.