உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(iii) நிறைவு: கடிதம் ஒரே முறையில் முடிவு பெற்றதாயும் முற்றுப் பெற்றதாயுமிருத்தல் வேண்டும். பின்வரைவாக (post script) அதே கடிதத்தில் வரைவதும், தொடர்ச்சி வரைவாக மறு கடிதம் வரை வதும், கடிதம் வரைவோரின் எண்ணாமற் செ-யும் இயல்பையும் ஒழுங் கீனத்தையும் திறமையின்மையையுமே காட்டும்.

(iv) செவ்வை: அடித்தடித்தும், கூட்டெழுத்தும் சங்கிலி யெழுத்து மாகவும், கிறுக்கியும், கோணல் மாணலாகவும், எழுதாமலும்; மை விழாமலும்; வெள்ளைத்தாளில், இயன்றவரை நேராகவும் நேர்த்தி யாகவும் நிறுத்தி யெழுதுங் கடிதங்கள், பகைவர்க்கும் நல்லெண்ண மூட்டும்.

(v) நிறுத்தக் குறியீடு: நிறுத்தக் குறியீடின்மையும் தவறான நிறுத்தக் குறியீடும், வாக்கியப்பொருளை மாற்றவும் படிப்பாரை மயங்க வைக்கவும் செ-யுமாதலால், அவ்விரண்டும் இல்லாதவாறு கவனித்தல் வேண்டும்.

5.உறவுத் தொடர்மொழி

கடிதம் விடுக்கப்படுவோர்க்கும் விடுப்போர்க்கும் உள்ள உறவை அல்லது தொடர்பைக் குறிக்கும் தொடர்மொழி, உறவுத் தொடர் மொழியாகும். இது செ-திக்குக் கீழாக வலப்புறத்தில் வரையப் பெறும். உறவினர்க்கு எழுதும் கடிதங்களில், உறவுத் தொடர்மொழி கீழ்வருமாறு இருக்கலாம்.

உன் அன்பான உடன்பிறந்தான்,

உம் அன்பான மைத்துனன் (அளியன்),

தங்கள் அன்புங் கீழ்ப்படிதலுமுள்ள மகன்,

குறிப்பு: கடிதம் விடுக்கப்படுவோர்க்கு உயர்வு கருதாதபோது 'உன்’, ‘உன்றன்' என்னும் சொற்களையும், சிறிது உயர்வு கருதியபோது 'உம்', 'உந்தம்' என்னும் சொற்களையும், மிகுந்த உயர்வு கருதியபோது 'தங்கள்' என்னும் சொல்லையும், உறவுத் தொடர்மொழியில் ஆளுதல் வேண்டும். இது எல்லாவகைக் கடிதங்கட்கும் ஒக்கும்.

து

நண்பருக்கு விடுக்கும் கடிதங்களில், உறவுத் தொடர்மொழி பின் வருமாறு இருக்கலாம்.

நண்பன், அன்பன்,

உன் அன்பான, தங்கள் அன்பான,