உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

63

சில நண்பர், தாம் வரையும் உறவுத் தொடர்மொழிகளில், ஏதேனு மொரு கருத்தை அல்லது விருப்பத்தைத் தெரிவிப்பது முண்டு.

எ-டு:

தங்கள் முன்னேற்றத்தில் நன்னோக்கங் கொண்ட,

தங்கள் வரவைப் பெரிதும் விரும்பும்,

தங்கள் வெற்றியைக் கருதும்,

தங்கள் மறுமொழியை ஆவலுடன் எதிர்பார்க்கும், என்றும் தங்கள் நலத்தையே கோரும்,

தங்கள் நன்றியை ஒருபோதும் மறவாத,

அறிமுகமாகாதவர்க்கு விடுக்கும் கடிதங்களில், உறவுத் தொடர்

மொழி 'இங்ஙனம்' என்று மட்டும் இருக்கலாம்; 'உன் உதவியை எதிர் பார்க்கும்', 'தங்கள் நட்பை நாடும்' என்பன போன்ற கருத்துத் தெரி விக்கும் தொடர்மொழியாகவு மிருக்கலாம்.

வேலையிலும் அலுவலிலும் தலைவராயிருப்பவர்க்கு விடுக்கும் கடிதங்களில், உறவுத் தொடர்மொழி பின்வருமாறு இருக்கலாம்.

தங்கள் உண்மையுள்ள,

தங்கள் உண்மையும் கீழ்ப்படிதலுமுள்ள,

தங்கள் உண்மையும் கீழ்ப்படிதலும் நன்றி யறிவுமுள்ள,

துறவியர்க்கு எல்லாரும் ஆண்டானுக்கு அடியானும் வரையும் கடிதங்களில், உறவுத் தொடர்மொழி ‘அடியேன்' என்றிருத்தல் வேண்டும். இங்குத் துறவியர் என்றது பட்டினத்தடிகளும் தாயுமானவரும் இராம லிங்க அடிகளும் மறைமலையடிகளும் விபுலாநந்த அடிகளும் போல்வாரையேயன்றி, காவி புனைந்திருக்கும் கல்லாத வரையன்று.

குறிப்பு: உறவுத் தொடர்மொழிக்கு முன், அதற்கு மேலாக, ‘இப்படிக்கு’ அல்லது 'இங்ஙனம்' என்னும் சொல்லைச் சேர்த் தெழுது வது இக்கால வழக்கமன்று. நூன்முகவுரை யிறுதியில், ஆசிரியன் கைந் நாட்டிற்கு மேல் ‘இங்ஙனம்' என்றெழுதுவதும் இக்காலத்தில்லை. மேற்குறித்தவாறு, அறிமுகமில்லாதவர்க் கெழுதும் கடிதங்களில் மட்டும் அதைத் தனித்து வரையலாம்.