உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

6. கைந்நாட்டு

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

உறவுத் தொடர்மொழிக்குக் கீழாக, அதனினுஞ் சற்று வலமாக, கடிதம் விடுப்போரின் பெயர் தந்தை பெயரின் முதலெழுத்துடன் தெளிவாக வரையப்படுதல் வேண்டும். அறிமுகமாகாதவர்க்கு எழுதுங் கடிதங்களில் அது மிகத் தெளிவாக இருத்தல் வேண்டும், பெண்பாலார் தம் பெண்மை குறிக்க வேண்டின், பெண் அல்லது பெண்பால் என்னும் சொல்லைப் பெயர்க்கு வலமாகப் பிறைக்கோட்டிற்குள் குறிக்கலாம்.

7. முகவரி

கடித வுறையின் பின்புறத்தில் அல்லது மடித்த கடிதத்தின் பின்புறத்தில், கடிதம் விடுக்கப்படுவோரின் முழு முகவரியும் தெளி வா- வரையப்படுதல் வேண்டும். அஞ்சற் கடிதமாயினும் ஆள்வாயி லா-விடுக்குங் கடிதமாயினும், வலப்புற மேன்மூலையில் முத்திரை யொட்டற்குரிய இடம் விட்டுவிட்டு, அதற்குக் கீழாக முகவரியின் முதல் வரியை இடக்கோடி யொட்டித் தொடங்கி, அதற்கடுத்த வரி களையெல்லாம் முறையே சற்று வலமாகத் தள்ளித் தள்ளித் தொடங்கி, இறுதிவரியின் முடிவு வலக்கோடி யொட்டுமாறு, வரைதல் வேண்டும்.

முதல்வரியில் அடைமொழியும் பெயரும் பட்டமும், முறையே குறிக்கப் படல் வேண்டும். இரண்டாம் வரியில் வேலையும் மூன்றாம் வரியில் வேலை செ-யும் கட்டடமும் நாலாம் வரியில் தெருப் பெயரும் ஐந்தாம் வரியில் ஊர்ப்பெயரும் குறிக்கப்பெறல் வேண்டும். கடிதம் வீட்டு முகவரிக்கு விடுக்கப் படின், இரண்டாம் வரியில் ஊர்ப் பெயரும் குறிக்கப்படல் வேண்டும். வேலைசெ-யும் கட்டடம் அல்லது இருப்பிடம் எல்லார்க்கும் மிக நன்றா-த் தெரிந்திருப்பினும், தெருப்பெயரைக் குறிப்பது நன்றே.

கடிதம் விடுக்கப்படுவோரின் ஊரும் விடுப்போரின் ஊரும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தனவாயின், ஊர்ப்பெயருக்கு அடுத்த வரியில் கூற்ற (தாலுகா)ப் பெயரும், அதற்கடுத்த (அதாவது இறுதி) வரியில் கோட்ட (மாவட்ட)ப் பெயரும், குறிக்கப்படல் வேண்டும். கடிதம் சேரவேண்டிய ஊரில் அஞ்சல் நிலையம் (post office) இல்லாவிடின், ஊர்ப்பெயருக்கு அடுத்த வரியில் அவ்வூருக்குரிய அஞ்சல் நிலையம் குறிக்கப்படல் வேண்டும். கடிதம் பெறுவோரின் ஊர் ஒரு கூற்றத் தலைநகரா யிருக்கு மாயின், கூற்றப்பெயர் குறிக்கப்பட வேண்டியதில்லை. அது மாவட்டத் தலைநகராயும் மாகாணத் தலைநகராயு மிருக்குமாயின்,

ஒரு