உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

65

கூற்றப் பெயரும் மாவட்டப் பெயரும் குறிக்கப்பட வேண்டியதில்லை. அது ஒரு பெரு நகரமாயி ருப்பினும், அவை தேவை யில்லை. முகவரியிற் குறிக்கப்படுவது பெருநகரச் சிறு தெருவாயின், அதனொடு அது உள்ள நகரப் பகுதியையும் குறித்தல் வேண்டும்.

கடிதம் போகவேண்டிய ஊருக்குப் பலவழியிருந்து அவற்றுள் குறுக்குவழி அல்லது அண்ணிய (சமீப) வழி அஞ்சற்காரனுக்குத் தெரி யாதென்று கருத இடமிருப்பின், ஊர்ப்பெயருக்கு அல்லது அஞ்சல் நிலையப் பெயருக்கு அடுத்த வரியில் இன்ன வூர்வழி என்பதைக் குறிப்பிடலாம்.

கடிதம் சேரவேண்டிய வூர், அடுத்த மாகாணத்தைச் சேர்ந்த தாயின் அம் மாகாணப் பெயரும், தொலைவிலுள்ள மாகாணத்தைச் சேர்ந்ததாயின் அம் மாகாணப் பெயருடன் நாட்டுப் பகுதியின் பெயரும், அயல்நாட்டைச் சேர்ந்ததாயின் அவற்றுடன் அவ் அயல் நாட்டுப் பெயரும், இறுதியில் குறிக்கப்படல் வேண்டும். ஒவ்வோர் இடப்பெயரும் ஒரு தனிவரியி லிருத்தல் வேண்டும் என்பதை மறத்தல் கூடாது. (தமிழர்க்கு அயல் மாகாணமும் அயல்நாடும் தமிழ்திரி நிலமும் மொழிபெயர் தேயமுமாதலின், அங்குள்ளார்க்குத் தெரியு மாறு அங்கத்து ஊர்கட்கு விடுக்கும் கடிதங்களிலெல்லாம், இன்று உலகப் பொதுமொழியா- வழங்கிவரும் ஆங்கிலத்திலேயே முகவரி யெழுதப் படல் வேண்டும்.)

ஒரு வரியில் எழுதவேண்டியதற்குப் போதிய இடமில்லையாயின், அதன் எஞ்சிய பகுதியை அதற்குக் கீழாக வலக்கோடி யொட்டி எழுத வேண்டும். முகவரியின் முதல் வரியில் குறிக்கப்படும் அடை மொழி கள் பின்வருமாறு இருக்கலாம்.

மதிப்புள்ள நண்பரான ஒத்த தரத்தினர்க்கு திருவாளர் (ஆண் பால்), திருவாட்டியார் (பெண்பால்) என்னும் அடைகளும்; உயர்ந்த தரத்தினர்க்குத் திருமான், திருமானார் (ஆண்பால்), திருமாட்டியார் (பெண்பால்) என்னும் அடைகளும்; அமைச்சர்க்கும் அரசியல் மதிப்புப்பெற்ற அதிகாரிகட்கும் மதிதகு (Honourable) மிக மதிதகு (Right Honourable) என்னும் அடைகளும்; கிறித்தவக் குருமார்க்குக் கனம் (Reverend), பெருங்கனம் அல்லது மகாகனம் (Right Reverend) என்னும் அடைகளும்; துறவியர்க்குத் திரு, மறைத்திரு, திருமிகு திரு,