உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தெ-வத்திரு என்னும் அடைகளும் சேர்க்கப்படலாம். கிறித்தவரல்லாத மதக்குருமார்க்கும், கிறித்தவக் குருமார்க்கும் துறவி யர்க்கும் குறிக்கப் பெற்ற அடைகளில் ஏற்றவற்றை வைத்தெழுதலாம்.

பொதுநல வூழியம்பற்றி அரசியலார் அளித்துள்ள இராவ்சாகிபு, திவான்பகதூர் முதலிய சிறப்புப் பட்டங்களும்; கல்வித் தேர்ச்சிபற்றி அரசியலாரும் அறிஞர் அவைகளும் அளித்துள்ள வித்துவான், பண்டித மணி, மகாமகோபாத்தியாயர், டாக்டர் முதலிய புலமைப் பட்டங்களும்; முன்னடைமொழிகளாகச் சேர்க்கப்பட வேண்டியவை யே. ஆயின், இவற்றைக் குறிக்கும்போது, முற்கூறிய திருவாளர் முதலிய பொது அடைமொழிகளைக் குறித்தல் கூடாது.

ஊரும் குலமும் உடைமையும்பற்றிச் சிலர் தாமாகத் தம் பெயர்க்கு முன் சேர்த்துக்கொள்ளும் அடைமொழிகளும் உள.

எ-டு: மயிலைச் சிவமுத்து

துடிசைகிழார் அ. சிதம்பரனார்

இவற்றுள் ஊர்ப்பெயருக்குமுன் பொது அடைமொழி வரும்; பிற பெயர்க்குமுன் அது வரத் தேவையில்லை.

எ-டு: திருவாளர் மயிலைச் சிவமுத்து

இளசைகிழார் ச. சோமசுந்தர பாரதியார்

போதிய இடமிருப்பின், அடைகள் பல்கியும் வரலாம்.

எ-டு பேராசிரியர் இளசைகிழார் ச. சோமசுந்தர பாரதியார், மகாமகோபாத்தி யாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர்.

இயற்பெயருக்குப் பின் குலப்பட்டப் பெயரும் தேர்வுப் பட்டப்

பெயரும் குறிக்கப் பெறலாம்.

எ-டு: கா.சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.

மதிப்பானவரின் பெயர்க்குப்பின், அவர்கள் என்னும் பின்னடை, குலப்பட்டத்திற்கும் தேர்வுப் பட்டத்திற்கும் இடையில் சேர்க்கப் பெறும்.

அதிகாரிகட்கும் தலைவர்க்கும் விடுக்கும் கடிதங்களாயின், இயற் பெயர் குறியாது பதவிப்பெயர் குறிப்பினும் போதும்.