உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

67

பதிவுசெ-யப் பெறுங் கடிதங்களாயின், மேற்கூறியவாறு கடிதம் விடுக்கப் படுவோரின் முகவரிமட்டுமன்றி, அதற்குக் கீழாக இடப்புற மூலையில், கடிதம் விடுப்போரின் முகவரியும் குறிக்கப்பெறல் வேண் டும். இது, பதிவு செ-யப்பெறாத கடிதங்கட்கு வேண்டாத தாயினும், அவற்றிலும் அதை எழுதுவது நல்லதே. இதனால், கடித வுறையைத் திறக்குமுன்னரே, அதை விடுத்தோர் யாரென அறிந்து கொள்ளலாம். இதனால் சில நன்மையுண்டு.

எடுத்துக்காட்டுகள்

(பதிவு செ-யப் பெறாதது)

அஞ்சல் தலை

வித்துவான் ஆறுமுக முதலியார் அவர்கள்

எம்.ஏ., பி.ஓ.எல்., எல்.டி.,

தமிழ்ப் பேராசிரியர்,

ஆசிரியர் கல்லூரி,

சைதாப்பேட்டை, சென்னை.

(பதிவு செ-யப் பெறாதது)

அஞ்சல் தலை

திருவாளர் மாணிக்கவேல் செட்டியார் அவர்கள், 12, கந்தப் பொடிக்காரத் தெரு, ஆம்பூர்,

(வடார்க்காட்டு மாவட்டம்)

விடுப்போன்:

பொன்னையா,

6, பாண்டித்துரைத் தெரு,

செவ்வா-ப்பேட்டை, சேலம்