உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(பதிவு செ-யப் பெற்றது)

சல் தலை

கனம் செல்லப்பா அவர்கள், பி.ஏ., பி.எட்.,

விடுப்போன்:

துரையரங்கன்,

தலைவர்,

திருப்பவுல் உயர்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை

6, புத்தூர்ப் பெருஞ்சாலை,

புத்தூர், திருச்சி.

மடிக்கப்பட்ட கடிதம்

திரு. ஆலாலசுந்தரஞ் செட்டியார் அவர்கள், எம்.ஏ.,

'சிவனகம்'

அகரம் சாலை,

தாம்பரம்,

சென்னை.

இங்ஙனம் ஏழுறுப்புகளும் நிரம்பியதே முழுக்கடிதமாகும். அவ் ஏழனுள்ளும், விளியும் செ-தியும் உறவுத் தொடர்மொழியும் சிறப்பா யமையின், மிகக் கவர்ச்சியை யுண்டுபண்ணும் என்பதை அறிதல் வேண்டும்.

கடித வகைகள் (Classification of Letters)

கடிதங்கள்,

1. உறவாடற் கடிதங்கள் (Social Letters),

2. தொழின்முறைக் கடிதங்கள் (Business Letters),

என இருவகைப் படும்.

உறவினர்க்கும் நண்பர்க்கும் அன்புசெயப்பட்டார்க்கும் உறவாடல் பற்றி விடுக்குங் கடிதங்கள் உறவாடற் கடிதங்களாகும். வேலை விண்ணப் பம் வணிகக்கடிதம் முதலியன தொழின்முறைக் கடிதங்களாம்.