உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

69

1. உறவாடற் கடிதங்கள்

(i) உறவுக் கடிதம் (Letters to Relatives)

போலிகை (மாதிரி)

(உணவுவிடுதியிலுள்ள மாணவன் ஒருவன் தன் பெற்றோர்க்

கெழுதுவது.)

நகராண்மை விடுதி, சேரிச்சாலை (Cherry Road) குமரசாமிப்பட்டி, சேலம்,

10-9-'50

என் அருமைத் தா-தந்தையீர்,

இறைவனருளால் நான் நலமாயிருக்கின்றேன். அங்ஙனம் தங்கள் நலத்தையும் அறிய அவா.

சென்ற வாரம் நான் விடுத்த கடிதம் சேர்ந்திருக்குமென்று நினைக் கிறேன்.

எங்கட்கு நாளைக் காலாண்டுத் தேர்வு தொடங்குகின்றது. இம் மாதம் 16ஆம் தேதி அது முடியும். அதற்கு அடுத்த நாளிலிருந்து 16 நாள் எங்கட்குத் தசரா விடுமுறை.

தேர்விற்கு நன்றா-ப் படித்திருக்கின்றேன். நன்றா- எழுதுவே னென்று நம்புகின்றேன்.

நான் இம்மாதம் 16ஆம் தேதி மாலையே புறப்பட்டு 17ஆம் தேதி காலை அங்கு வந்துசேர்வேன். தம்பி தங்கையர்க்கு என் வரவைப் பற்றித் தெரிவியுங்கள். வழிச்செலவுக்குக் கொஞ்சம் பணம் அனுப்பி வையுங்கள்.

தங்கள் அன்புங் கீழ்ப்படிதலுமுள்ள மகன்,

ந. மறைக்காடன்

பயிற்சி

1.

கீழ்க்குறிப்பிட்டவாறு கடிதம் வரைக:

உணவுவிடுதியிலுள்ள மாணவன் ஒருவன், அடுத்த விடுமுறைக்குத் தன் அம்மான் வீடு செல்வதாகத் தன் தந்தைக்கு வரைவது.