உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

மீண்டுமொரு கோல் போட்டுத் தன் பெயரை மெ-ப்பித்து விட்டான் வெற்றிவேல். எங்கட்குண்டான மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஊராரெல்லாம் விளையாட்டு முடிந்தவுடன் ஓடிவந்து வெற்றி வேலைச் சூழ்ந்துகொண்டு, நீண்டநேரம் நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தினர். சிலர் அவன் வீடுவரை அவனைத் தொடர்ந்து சென்றனர். இன்று இவ் வூரெல்லாம் அவனைப் பற்றித்தான் பேச்சு.

இஃது உனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் விளக்குமென்று கருதுகின்றேன்.

பிற பின்.

பயிற்சி

நண்பன் ஆடவல்லான்

1.

2.

3.

4.

5.

ம்

6.

7.

கீழ்க் குறித்தவாறு கடிதம் வரைக:

ஒரு மாணவன் தான் புதிதா-ச் சேர்ந்துள்ள பள்ளியின் அல்லது கல்லூரியின் சிறப்பைப்பற்றித் தன் நண்பனுக்கு வரைவது.

ஒரு மாணவன், தான் தேர்வெழுதவிருக்கும் மையத்தில் (centre), தனக்கு வேண்டிய வசதி செ-து வைக்கும்படி, தன் நண்பனுக் கெழுதுவது.

ஒரு கல்விநிலையத்தில் பிந்திச் சேர்ந்த மாணவனொருவன் தனக்குக் கிடைக்காத புத்தகமொன்றைச் சில மாதங்கட்கு இரவல் தரும்படி, ஒரு நண்பனைக் கேட்பது.

ஒரு மாணவி தனக்கு மிக இன்பமூட்டிய ஒரு புத்தகத்தைப் பற்றித் தன் நண்பிக் கெழுதுவது.

ஒரு மாணவன் தன் நண்பனைத் தசரா விடுமுறைக்குக் குற்றாலத் திற்கு வருமாறு அழைப்பது.

ஓர் ஊருக்குப் பந்தயமாடச் செல்லும் மாணவனொருவன் அங் குள்ள நண்பனுக்கு அதைப்பற்றித் தெரிவிப்பது.

நோ-ப்பட்டிருக்கும் நண்பனுக்கு ஆறுதலாக வரைவது.

8. தேர்வில் தவறிய நண்பனுக்குத் தேறுதல்மொழி கூறுவது.