உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

(iii) அழைப்பிதழ் (Notes of Invitation)

பிதழ்)

போலிகை 1

73

(ஒரு மாணவன் தன் தம்பி திருமணத்திற்கு விடுக்கும் அழைப்

ஐய/அம்ம,

திருமண அழைப்பிதழ்

இறைவன் திருவருளை முன்னிட்டு, (நிகழும் வள்ளுவராண்டு, 1981 ஆனி மாதம் 22ஆம் நாள் (20-6-1950) வியாழன் காலை 6 மணி முதல் 8 மணிக்குள், கடக ஓரையில், இவ் வூர்ப் பொ-யாமொழித் தெருவில் 21ஆம் எண்ணுள்ள என் இல்லத்தில், என் தம்பி நீடுவாழி சீராளனுக்கும் கண்ணமங்கலம் பண்ணையார் கழறிற்றறிவாரின் இளைய மகள் நிறைசெல்வி, கயற்கண்ணிக்கும், பெரியோர் உறுதி செ-தபடி, திருமணம் நிகழப்போவதால், தாங்கள் தம்

ஐய,

னகம்'

போலிகை 5

மனைபுகுவிழா அழைப்பிதழ்

இவ்வூர்க் கீழைத்தேர்வீதிக் கோடியில், யான் கட்டியுள்ள 'இன் என்னும் என் புதுமனையின் புகவுவிழா, வருகிற புதன் (4-5-'49) நடைபெற விருப்பதால், அவ் விழாவில் தாங்கள் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

திருவீழிமிழலை,

இளமுருகன்

1-5-'49

பயிற்சி

1.

கீழ்க்குறித்தவாறு அழைப்பிதழ் வரைக:

ஒரு மாணவன், தான் பயிலும் கல்விநிலையத்தில் தன்னை மாணவர் இலக்கியக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தமை பற்றி, தன் நண்பரை ஒரு சிற்றுண்டிக்கு வரவழைப்பது.

2. ஒரு மாணவன், தான் கற்கும் பள்ளியில் சொற்பொழிவாற்ற வரும் ஒரு பேராசிரியர்க்கு அளிக்கும் விருந்திற் கலந்து கொள்ளு மாறு, ஆசிரியரையும் மாணவத் தோழரையும் அழைப்பது.

3.

ஒரு பெருஞ்செல்வ மாணவன், தன் மாளிகையில் தானாக அமைத்த பொருட்காட்சிக் கூடத்தைக் கண்டு களிக்குமாறு, தன் நண்பரை அழைப்பது.