உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(iv) பாராட்டுக் கடிதம் (Congratulatory Letters)

போலிகை

(ஓர் அனைத்திந்தியக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு ஐயா யிரம் வெண்பொற்காசு பெற்ற மாணவனை, நண்பன் பாராட்டி வரைவது.)

அருமந்த நண்ப,

6, சேரமான் தெரு, பெரும்பற்றப்புலியூர்,

14-8-1947.

அனைத்திந்தியக் கட்டுரைப் போட்டியில், ஐயாயிரம் உருபா பரிசும் 'அருங்கலைவாணன்' என்னும் பட்டமும் பெற்றதாக, இற்றைச் செ-தித்தாள்கள் எல்லாவற்றிலும் கண்டு, பன்முறை படித்து மகிழ்ந் தேன். உன் திறமை இன்றுதான் உலகிற்கு வெளியாயிற்று. உன் ஓயா உழைப்பையும் உலையாக் கடைப்பிடியையும் உளமாரப் பாராட்டு கின்றேன்.

உன் பெற்றோரும் நீ பிறந்த நாடும் உன் உற்றாரும் மற்ற நண்பரும், உன்னால் பெருமை பெற்றனர். இத்தகைய அரிய கட்டுரை இன்னும் பல உலகிற்கு வழங்குமாறு, எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நீண்ட வாழ்நாளும் நிறைந்த உடனலமும் அருள்வானாக.

என்றும் உன் முன்னேற்றத்தை விரும்பும்

நண்பன், இளையபெருமாள்

பயிற்சி

கீழ்க்குறித்தவாறு பாராட்டுக் கடிதம் வரைக:

1. அரசியல் தேர்வில் (அல்லது பல்கலைக்கழகத் தேர்வில்) மாகா ணத்தில் முதன்மையா-த் தேறின மாணவனுக்கு, நண்பன் வரைவது.

2.

தன் செல்வத்திற் பெரும் பகுதியை ஏழைமாணவர் இலவச விடுதிக்களித்த நண்பனுக்கு ஒரு மாணவன் வரைவது.