உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

75

(v) வாழ்த்துக் கடிதம் (Benedictory Letters)

போலிகை 1

ஒரு மாணவன் தன் நண்பனது பிறந்த நாளன்று அவனை வாழ்த்தி வரைவது)

12, கூலக் கடைத்தெரு, திருநெல்வேலி,

1-11-250

அன்ப,

நீ நாளை உன் பிறந்த நாளைக் கொண்டாடுவதறிந்து பெரு மகிழ்ச்சி கொண்டேன்.

இறைவன் திருவருளும் ஏனையோர் நல்லெண்ணமும் வா-க்கப் பெற்று, நீ இன்னும் எத்துணையோ பிறந்த நாளைக் காணுமாறு நீடூழி நிலவுலகில் வாழ்ந்திருக்க.

இஃதுடன் விடுத்துள்ள 'பார்க்கர்' ஊற்றிறகியை (fountain pen) உன் பிறந்தநாட் பரிசாகப் பெற்றுக்கொள்க.

நண்பன்,

செந்தில்வேலன்

போலிகை 2

(ஒரு மாணவன் தன் நண்பனுக்கு விடுக்கும் திருமண வாழ்த்து)

இயற்கைக் கேற்பவும் இறைவன் ஏற்பாட்டின்படியும் இல்லறம் என்னும் நல்லறம் புகுந்த நண்பரீர்,

நீர் இன்றே உண்மையான உலக வாழ்க்கை தொடங்கி, நீரும் உம் மனைவியாரும் நீங்காத வாழ்க்கைக் கூட்டாளிய ராயினீர். ஓரு யிரும் ஈருடலும்போல ஒன்றிய காதலரா-, இன்பத்திலும் துன்பத் திலும் வாழ்விலும் தாழ்விலும் ஒருநிலைப்பட்ட உள்ளத்தினரா-,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

என வள்ளுவர் வகுத்த வாழ்க்கையினரா-, அறிவுடை மக்களைப் பெற்று அளவில்காலம் இன்புற்று வாழ்ந்திருப்பீராக.