உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இஃதுடன் விடுத்துள்ள மறைமலையடிகள் நூற்றொகுதியை, உம்

திருமணப் பரிசாகப் பெற்றுக்கொள்க.

மணவூர்,

10-9-'48

அன்பன்,

மணக்கால் நம்பி

போலிகை 3

(இதுவுமது)

அழகநம்பி - அலர்மேல் மங்கையார் திருமண வாழ்த்து இறைவன் வகுத்த இயற்கை நெறிப்படி மாண்பு மிக்க மனை யறம் புகுந்த மணமக்காள்,

நீங்களிருவரும், அன்றிலுக்கொப்பா- அகலாதிருந்து, அன்பினுக் களவையா- அகமுறக் கலந்து, இந்திரவின்பத்தை இம்மையில் நுகர்க.

உற்றார் மகிழவும் மற்றோர் புகழவும், குன்றா வளமுங் குலையா நலமுங்கொண்டு, காவிரி மணலினுங் கழிபல நாள் நீங்கள் வாழ்ந் திருக்க.

உங்கள் மரபு, அத்திபோல் துளிர்த்து அரசுபோல் ஓங்கி ஆல் போற் படர்ந்து அறுகுபோல் வேரூன்றி, மூங்கில் போல் என்றும் முசி யாமல் வாழ்ந்திருக்க.

திருவிடைமருதூர்,

6-5-'49

அன்பன், இன்பநாயகம்

மதியழகன்

-

போலிகை 4

(இதுவுமது)

மங்கையர்க்கரசியார் திருமண வாழ்த்து

இல்லறம் என்னும் இணைவாழ்க்கை புகுந்த துணைவர்காள்,

நீங்களிருவரும், உலகம் என்னும் பூங்காவில் இன்பம் என்னும் தேனை நுகரும் வண்டுகள்; காதல் என்னுஞ் சகடத்தை வாழ்க்கை யென்னும் காட்டுப்பாதையில் இழுத்துச்செல்லும் இளங்காளைகள்.

உங்கள் இல்வாழ்க்கை, ஈகை விருந்தோம்பல் வேளாண்மை முதலிய அறங்களால் இல்லற வாழ்க்கை யாகுக.