உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

77

பால் புளித்தாலும் பகலிருண்டா டாலும் உலகங் குலைந்தாலும் உயர்ந்தோர் தவறினாலும், நீங்கள் நிலைபிறழாது நீடூழி வாழ்ந்திருக்க.

பூம்பாறை,

9-10-1958

நண்பன், வல்லாளன்

பயிற்சி

1.

கீழ்க்குறித்தவாறு வாழ்த்துக் கடிதம் வரைக:

புதுமனை புகும் நண்பனை வாழ்த்தி வரைவது.

2. இங்கிலாந்திற்கு மேற்படிப்புக்காகச் செல்லும் நண்பனுக்கு வாழ்த்து.

2. தொழின்முறைக் கடிதங்கள்

(i) அலுவற் கடிதம் (Official Letters)

போலிகை

(ஒரு புத்தகசாலையில் பாதிநேரம் வேலை செ-யும் கல்லூரி மாணவர் ஒருவர் அப் புத்தகசாலை முதலாளிக்கு வரைவது.)

அன்பார்ந்த ஐய,

வணக்கம்.

(தங்கல்) காஞ்சிபுரம்

8-10-'48

இன்று நான் இங்குள்ள எண்டர்சன் எண்டர்சன் உயர்நிலைப்

உயர்நிலைப்

பள்ளித்

தலைமையாசிரியரைப் பார்த்தேன். அவர், சங்க நூல்கள் ஒரு தொகு தியும், 'புறநானூற்றுக் கட்டுரைகள்', 'வடக்குந் தெற்கும்', 'மறைமலை யடிகள்', 'பாணர் கைவழி' என்ற நான்கு நூல்களில் அவ்வாறு படியும், நூல்நிலையத்திற்கு வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்.

ஆணை

வந்தவுடன் அவற்றைக் கட்டிப் பேற்றஞ்சலில் (v.p.p) விடுத்துவிடுக.

நாளைச் செங்கற்பட்டு மாவட்ட நாட்டாண்மைக் கழகப் பாடப் புத்தகக் குழுக் கூடப்போகின்றதாம். உடனே அங்குச் சென்று, நம் புத்தகங்களைப் பாடமாக வைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செ-துவிட்டு, இரண்டொரு நாளுக்குள் திரும்பிவிடுகின் றேன். கல்லூரி திறக்க இன்னும் ஒரு மாதமிருப்பதால், சென்ற மாதம்