உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

விட்டுப்போன கணக்குகளையெல்லாம் நான் வந்தபின் முடித்து

விடுகின்றேன்.

தங்கள்

தாழ்மையும் கீழ்ப்படிதலுமுள்ள ஊழியன்,

பயிற்சி

அப்பாத்துரை

1.

2.

கீழ்க்குறித்தவாறு அலுவன்முறைக் கடிதம் வரைக:

ஒரு குழும்பில் (கம்பெனியில்) பாதிநேரம் வேலை செ-யும் மாணவர் ஒருவர் அக் குழும்பிற்காக வாங்கச் சென்ற சரக்கு களைப் பற்றித் தெரிவிப்பது.

ஓர் அலுவலகக் கணக்கர், குறித்த நேரத்தில் வேலை முடியாமை பற்றித் தம்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டிற்குப் பதில் விடுப்பது.

3. ஒரு தொழிற்சாலையிற் செ-யப்படும் பொருள்களை விலைப் படுத்தற்கு வேண்டிய ஆணைகள் வாங்கச் சென்ற வழிப்போகு முகவர் (Travelling Agents), தம் முதலாளிக்கு வரைவது.

4.

ஒரு செ-தித்தாட்கு விளம்பரம் தொகுக்கச் சென்ற மாணவர், அத் தாளாசிரியர்க்கு வரைவது.

5. ஒரு கல்வி நிலைய மாணவர் இலக்கியக் கழகச் செயலாளர், ஓர் அறிஞரைச் சொற்பொழிவாற்ற வருமாறு வேண்டுவது.

(ii) வணிகக் கடிதம் (Business Letters)

போலிகை

(ஒரு மாணவன் ஒரு புத்தகம் தருவிப்பது)

6, மாணவர் விடுதி,

அண்ணாமலை நகர், 20-2-‘50

நூற்பதிப்புக்

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த

கழகத்தார்க்கு:

ஐயன்மீர்,

தாங்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ‘பாணர் கைவழி' என்னும் இசைத்தமிழ் ஆராச்சி நூலில் அட்டைக்கட்டு 1 படியும், துணிக்கட்டு 1