உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

1.

2.

3.

பயிற்சி

கீழ்க்குறித்தவாறு விடுமுறைக் கடிதம் வரைக:

ஒரு மாணவன் தன் தமையனாரின் திருமணத்திற்கு விடுமுறை வேண்டுவது.

ஒரு மாணவன் தன் பெற்றோருடன் ஊருக்குப் போதற்கு விடுமுறை வேண்டுவது.

ஒரு மாணவன் தனக்கு வீட்டில் ஒரு முக்கியமான வேலை யிருப்பது பற்றி விடுமுறை வேண்டுவது.

(iv) செ-தித்தாட் கடிதம் (Letters to News papers)

ஐயா,

போலிகை

16, புத்தூர்ப் பெருஞ்சாலை, திருச்சி,

18-8-'50

'தன்னாட்டு நண்பன்' ஆசிரியர்க்கு:

இப்போதிருக்கும் பங்கீட்டு

முறையில்

பல பெருநன்மை

களிருப்பினும், அதிலுள்ள இரு சிறு குறைகளையும் ஈங்கு எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

ஒன்று அரிசிபற்றியது. இந் நாட்டு வெப்ப நிலைக்குப் பச்சரிசி ஏற்காதென்று கண்டு, தமிழர் தொன்றுதொட்டுப் புழுங்கலரிசியே உண்டுவந்திருக்கின்றனர். புழுங்கலரிசி வேண்டியவர்க்குப் பங்கீட்டுச் சீட்டில் புழுங்கலரிசியென்று குறிக்கப்பட்டிருப்பினும், அது சில போது அவர்க்குக் கிடைப்பதில்லை. நெல்லைப் பச்சையா-க் குத்து வதற்குப் பதிலாக அவித்துக் குத்திவிட்டால், புழுங்கலரிசி எவ்வளவு வேண்டு மாயினும் பெற்றுக்கொள்ளலாம்.

இன்னொன்று ஆடைபற்றியது. ஆலைத்துணி, கற்றோர்க்கும் அலுவலாளர்க்கும் தேவையாயிருக்குமளவு கல்லார்க்கும் கூலிக்கார ருக்கும் தேவையாயில்லை. கடைகட்கு வரும் ஆலைத்துணியோ குறைவு. அதையும் தெருவில் ஆள்களை வரிசையா- நிற்கவைத்துக் கொடுப்பதால், தேவையுள்ளவர்க்குக் கிடைக்காமல் தேவையில்லாத