உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

81

வர்க்கே பெரும்பாலும் கிடைக்கின்றது. நம்நாடு நூற்றுக்குத் தொண் ணூறு எழுதப்படிக்கத் தெரியாத நாடு. ஆதலால், நூற்றுக்குத் தொண்ணூறு எழுதப்படிக்கத் தெரிந்த மேனாட்டு வரிசை முறை நம் நாட்டிற்கு ஏற்காது. மதிப்பும் மானமுமுள்ள கற்றோர் அவை யில்லாத கல்லாதாருடன் நடுத்தெருவில் நிற்பது கூடாத காரிய மாதலின், ஆலைத் துணியை ஆங்காங்குள்ள அலுவலகங்கட்கும் கல்வி நிலையங்கட்கும் வேண்டிய அளவு பகுத்துக் கொடுத்துவிட்டு, கூலி வேலைக்காரருக்கு உரமுள்ள கைத்தறித் துணியைக் கொடுப் பதே, நம் நாட்டிற்கேற்ற முறையாகும்.

பயிற்சி

நன்மாறன்

1.

கீழ்க்குறித்தவாறு செ-தித்தாட் கடிதம் வரைக:

புகைவண்டிகளில் மூன்றாம் வகுப்புக் கூண்டுகளிலுள்ள குறை பாடுகளைத் தெரிவிப்பது.

2. இரவில் அக்கம்பக்கத்தார் தூக்கங்கெடுமாறு, வானொலிப் பெட்டி யை விடியவிடிய இயக்குவாரை, அரசியலார் கவனித்துத் தண்டிக் கும் பொருட்டு வரைவது.

3.

பொதுவான அறநிலையங்களில் நடக்கும் ஓரவஞ்சகச் செயல் களைக் கண்டிப்பது.

4. போக்குவரவிற்குரிய வசதிகளில்லா விடத்து அவற்றை ஏற்படுத்து மாறு அரசியலாரை வேண்டுவது.

5. பொதுமக்களின் கல்விபற்றி அரசியலார் கையாள வேண்டிய சிறந்த முறைகளைத் தெரிவிப்பது.

6. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட குலப்பிரிவின் தீமைகளை எடுத்துரைப்பது.

7. இந்தியரின் ஒற்றுமைக்கான வழிகளைத் தெரிவிப்பது.

8. நல்ல முறையில், அரசியல் வருவா-க்கேற்ற புது வழிகளை வகுத்துக் காட்டுவது.

9.

ஒரு கல்விநிலைய ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தைப்பற்றி வரைவது.