உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(v) விண்ணப்பக் கடிதம் (Letters of Application)

போலிகை

(கல்லூரி மாணவர் ஒருவர் ஓர் உயர்நிலைப்பள்ளி மேலாளருக்கு விடுக்கும் விண்ணப்பம்),

திருவையாற்று அரசர் கல்லூரி மாணவன் திருமலையப்பன், சேலம் மாவட்டம் வேலூர்க் கண்டர் உயர்நிலைப்பள்ளி மேலாள ருக்கு, விடுக்கும் விண்ணப்பம்.

ஐய,

தங்கள் பள்ளிக்கு ஒரு தமிழாசிரியர் தேவையென்று இம் மாதம் 17ஆம் தேதி 'இந்து'வில் தாங்கள் செ-துள்ள விளம்பரங் கண்டு, இவ் விண்ணப்பத்தை விடுக்கின்றேன்.

நான் இக் கல்லூரியில் ‘புலவன்' இறுதி வகுப்பு மாணவன். அடுத்த வாரம் 'வித்துவான்' தேர்வு எழுதுவேன். தேறிவிடுவேன் என்ற முழுநம்பிக்கையுண்டு. நான் இக் கல்லூரியில் சேருமுன், திருச்சிப் பீம நகர் நகராண்மை மேல்நிலைத் துவக்கப் பள்ளியில் (Higher Elemen tary School), ஓராண்டு ஆசிரியவேலை பார்த்திருக்கின்றேன்.

நான் தமிழன். என் மதம் சிவநெறி. என் அகவை (வயது) 24.

நற்சான்றிதழ்கள் இதனுடன் வைக்கப் பெற்றுள.

எனக்கு வேலை கிடைத்தபின், உண்மையாகவும் திறமையாக வும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறுகின்றேன்.

திருவையாறு,

20-3-'45

தங்கள் கீழ்ப்படிதலுள்ள ஊழியன்,

திருமலையப்பன்

பயிற்சி

1.

கீழ்க்குறித்தவாறு விண்ணப்பக் கடிதம் வரைக:

ஒரு மாணவர் தமக்குப் பாதிநேர வேலையளிக்கும்படி, ஒரு குழும்புத் தலைவரை வேண்டுவது.

2. பள்ளியிறுதி (S.S.L.C.) தேறிக் கையச்சுப் (Type-writing) பயின்ற ஒருவர், இருப்புப்பாதையில் ஒரு கணக்கர் வேலைக்கு விண்ணப் பிப்பது.