உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

83

(vi) முறையீட்டுக் கடிதம் (Written Complaint)

போலிகை

ஆம்பூர் வளையற்காரத் தெரு 17ஆம் எண் வீட்டில் குடியி ருக்கும் இளையபெருமாள், ஆம்பூர் ஊர்காவல் துணை உண்ணோட் டகர் (Sub- Inspector of Police) அவர்கட்கு எழுதுவது:

ஐயா,

நேற்று மாலை 7 மணிக்குப் புகைவண்டி நிலையம் சென்று திரும்பி, மீண்டும் ஓரிடத்திற்குப் போகவேண்டியிருந்ததால், என் மிதி வண்டியை எங்கள் வீட்டு வெளிமுற்றத்தில் வைத்துவிட்டு உள்ளே தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தேன். அதற்குள், யாரோ ஒருவன் என் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஓடிப் போ-விட்டான். நேற்றிர வெல்லாம் பலவிடங்கட்குச் சென்று தேடியும் பலரை வினவியும் பார்த்தேன். ஒருவகையிலும் துப்புத் துலங்கவில்லை.

அன்பு செ-து அதைக் கண்டுபிடித்துத் தருவீர்களாயின், பெரிதும் நன்றி பாராட்டுவேன்.

என் மிதிவண்டியின் பெயர் எர்க்குலிசு. அதன் எண் 18096. அதை இவ்வூர்ச் சின்னையன் மிதிவண்டிக் கடையில் 13-11-'46-ல் வாங்கினேன்.

பயிற்சி

இங்ஙனம், இளங்கண்ணன்

12-10-'48

1. ஒருவன் தான் குடியிருக்கும் வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும் வீட்டுக்காரரைப்பற்றி, துணைத் தண்டலாளர்க்குத் (Deputy Collec-

tor) தெரிவிப்பது.

2. இரவுதோறும் குடித்துவிட்டு வந்து தெருப்பூசல் செ-யும் ஒரு குடிகாரனைப்பற்றி, ஊர்காவல் அதிகாரிக்குத் தெரிவிப்பது.

3. தெருச்சாக்கடை

சரியா- மூடப்படாதது காரணமாக நேரும் கொசுக்கடியைப்பற்றி, உடல்நல அதிகாரிக்குத் தெரிவிப்பது.

4. அஞ்சற்காரன் ஒழுங்கா- வந்து கடிதங் கொடுக்காததை, அஞ்சல் தலைவர்க்குத் தெரிவிப்பது.