உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

5.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பாற்பண்ணை வேலைக்காரன் தண்ணீர்ப்பால் ஊற்றுவதுபற்றி, பண்ணைத் தலைவர்க்குத் தெரிவிப்பது.

6. ஒருவன், தன்னைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியிருக்கும் தன் பகைவரைப்பற்றி, தண்டலாளர்க்குத் தெரிவித்துப் பாதுகாப்பு வேண்டுவது.

7. பங்கீட்டுக் கடைகாரன் செ-யும் முறைகேட்டைப் பங்கீட்டதி காரிக்குத் தெரிவிப்பது.

8.

கள்ளவிலையில் கொள்ளையடிக்கும் அதிகாரிகட்குத் தெரிவிப்பது.

கடைகாரனைப்பற்றி,

(vii) பரிந்துரைக் கடிதம் (Recommendatory Letters)

போலிகை

ஒருவர் தம் நண்பருக்கு வேலை தரும்படி, ஒரு படப்பிடிப்பக

முதலாளிக்கு வரைவது.)

68, அரியநாயக முதலியார் தெரு, இராயவேலூர்

15-3-'49.

அன்பார்ந்த ஐய,

இக் கடிதம் கொண்டுவரும் திருவாளர் சிற்றரசு என் நெருங்கிய நண்பர். இவர் பள்ளியிறுதிவரை கல்வி பயின்றவர்; ஆங்கிலம் தமிழ் தெலுங்கு ஆகிய மும்மொழி பேச வல்லவர். இவர் தமிழ்ப்பற்றும் தமிழிலக்கியப் பயிற்சியும் உடையவர்; நகைச்சுவையுடன் நாவன்மை யாகப் பேசும் ஆற்றல் வா-ந்தவர். உரைநடையும் கதையும் வரை வதில் இவருக்கு மிகுந்த திறமையுண்டு. உண்மையும் கடமை யுணர்ச்சியும் ஒழுக்கமு முள்ளவராதலின், இவரைத் தங்கள் படப் பிடிப்பகத்தில் கதை வரைவாளராக அமர்த்திக்கொள்ளின், தங்கட்குப் பேரும் புகழும் உண்டாகுமென்பது திண்ணம். இவருக்குச் செ-வ தெல்லாம் எனக்குச் செ-வதொக்கும்.

நண்பன், அண்ணல்தங்கோ