உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

113. யாப்பிலக்கணம்

இருவகைப்படும்.

91

உறுப்பிலக்கணம், செ-யுளிலக்கணம் என

114. உறுப்பிலக்கணமாவது எல்லாச் செ-யுள்கட்கும் பொதுவான உறுப்புகளைப்பற்றிக் கூறும் இலக்கணம்.

115. செ-யுளிலக்கணமாவது அவ் வுறுப்புகளாலான செ-யுள் களைப் பற்றிக் கூறும் இலக்கணம்.

உறுப்பிலக்கணம்

116. செ-யுளுறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறாம்.

117. அவற்றுள் எழுத்து முதலும், சார்புமாக முன்னர்க் கூறப்பட்டவையே.

அசை

எழுத்தினாலாவது அசை.

118. அசையாவது, எழுத்துகளின் ஒலித் தொடர்ச்சி இடையிடை அசைக்கப்பட்டு நிற்பது.

-

அசைத்தல் ஒலியைக் கூறுபடுத்தல்.

அசை உயிரெழுத்தாலும் உயிர்மெ- யெழுத்தாலும் உண்டாகும்.

119. அசை நேரசை, நிரையசை என இருவகைப்படும். நேரசையாவது ஓர் எழுத்து நேரே (அதாவது தானா- ஒலித்தல். நிரையசையாவது ஈரெழுத்து நிரந்து (கலந்து) ஒலித்தல்.

உ-ம். வா - நேரசை. வரி - நிரையசை.

நிரையசை யெழுத்துகள் பிரிந்தொலியா.

120. நேரசை குறில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும் நெடில் தனித்தும், நெடில் ஒற்றடுத்தும் நால்வகையாக வரும்.

ஒற்று மெ

உ-ம்.

க-குறில் தனித்தது. கல்குறில் ஒற்றடுத்தது. கா -நெடில் தனித்தது.

கால் - நெடில் ஒற்றடுத்தது.