உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இயற்றமிழ் இலக்கணம்

குறிலும் நெடிலும், பிற உயிரெழுத்துகளோடு கலவாமல், அ, ஆ என விட்டிசைத்தா லன்றி நேரசை யாகா.

வீ ர வெள் வேல் என்னும் சொற்றொடரில் நால்வகை நேரசை களும் இருத்தல் காண்க.

121. நிரையசை குறிலிணை தனித்தும், குறிவிணை ஒற்றடுத்தும்குறில் நெடில் தனித்தும், குறில் நெடில் ஒற்றடுத்தும் நால்வகையாக வரும்.

குறிலிணை - இரு குறில்.

உ-ம்.

கலகுறிலிணை தனித்தது.

கலம் - குறிவிணை ஒற்றடுத்தது.

- குறில்நெடில் தனித்தது.

கலாம் - குறில்நெடில் ஒற்றடுத்தது.

குறில் முன்னும், நெடில் பின்னுமாக வருவது ஒரு நிரையசையென் றும், நெடில் முன்னும், குறில் பின்னுமாக வருவது இரு நேரசை யென்றும் தெரிந்துகொள்க.

உ-ம். சிவா ஒரு நிரையசை.

வாசி - இரு நேரசை.

திருமகன் வராதிரான் என்னும் சொற்றொடரில் நால்வகை நிரையசை களும் இருத்தல் காண்க.

ஒரு சொல்லிற் பல குறில்கள் அடுத்தடுத்து வரின் முதலிலிருந்து இரண் டிரண்டா- இணைந்தொலிக்கும்.

உ-ம்.

வருகிறது.

சீர்

122. அசையினாலாவது சீர். அது நால்வகைப்படும்.

1. ஓரசையினாலாவது ஓரசைச்சீர் அல்லது அசைச்சீர். 2. ஈரசையினாலாவது ஈரசைச்சீர் அல்லது இயற்சீர். 3.மூவசையினாலாவது மூவசைச் சீர் அல்லது உரிச்சீர். 4. நாலசையினாலாவது நாலசைச் சீர் அல்லது பொதுச்சீர்.

ஒரு பாட்டிற் சீரறுத்து நிற்கும் அசை அல்லது அசைக்கூட்டம் சீரெனப் பட்டது. சீர் - தாளம்.