உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இயற்றமிழ் இலக்கணம்

இப் பாட்டில் முதலடியில் நான்கு சீரும், இரண்டாமடியில் மூன்று

சீருமாக மொத்தம் ஏழு சீருள. அவை யாவை?

சீர்

அசைவா-பாடு

சீர்வா-பாடு

சீர்ப்பெயர்

அகர

நிரை நேர்

புளிமா

இயற்சீர்

முத ல

நிரை நேர்

புளிமா

இயற்சீர்

எழுத் தெல் லாம்

நிரை நேர் நேர்

புளிமாங்கா-

வெண்சீர்

ஆதி

நேர் நேர்

தேமா

இயற்சீர்

பக வன்

நிரை நேர்

புளிமா

இயற்சீர்

முதற் றே

நிரை நேர்

புளிமா

இயற்சீர்

உலகு

நிரை நேர்

புளிமா

இயற்சீர்

இங்ஙனமே ஏனைச் செ-யுள்களையும் பிரித்துக் கொள்க.

அடி

126. சீரினாலாவது அடி, செ-யுளுக்கு அடி போல்வது அடியெனப் பட்டது. அடி பாதம்.

சீர்கள் அடுத்து வருவது அடி யெனினும் பொருந்தும்.

127. அடி: குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.

128. குறளடி: இருசீரடி குறளடி. அது குறளாயிருத்தலாற் குறளெனப் பட்டது. குறள் - குட்டை.

உ-ம்.

கல்லால் நிழல்மலை வில்லார் அருளிய

பொல்லார் இணைமலர்

நல்லார் புனைவரே.

129. சிந்தடி: முச்சீரடி சிந்தடி. அது சிந்தா யிருத்தலாற் சிந்தெனப் பட்டது.

சிந்து - குறளினும் சற்று நெடியது.

உ-ம்.

1

2

3

இருது வேற்றுமை யின்மையாற்

சுருதி மேற்றுறக் கத்தினோ

டரிது வேற்றுமை யாகவே

கருது வேற்றடக் கையினா-