உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

105

9. தனியாகு பெயர்: தானியாகு பெயராவது ஒரு தானத்தில் (இடத்தில்) உள்ள பொருளின் பெயர், அத் தானத்திற்கு ஆகி வருவது. இஃது இடவாகு பெயருக்கு எதிர்.

உ-ம்.

கழல் பணிந்தான் - இதில் கழல் என்னும் அணியின் பெயர் அதை யணிந்துள்ள காலுக்கு ஆகி வந்தது.

10. கருவியாகு பெயர்: கருவியாகு பெயராவது ஒரு கருவியின் பெயர் அதனாற் செ-யப்படும் பொருளுக்கு ஆகி வருவது. கருவியினாற் செ-யப் படுவது காரிய மெனப்படும். கருவி எனினும் காரணம் எனினும் ஒக்கும்.

உ-ம். செம்பு கொண்டுவா - இதில் செம்பு என்னும் உலோகப்பெயர் அதனால் செ-யப்படும் பாத்திரத்திற்கு ஆகி வந்தது.

செம்பு என்பது இப்போது பிற உலோகப் பாத்திரங்களையும் இனவிலக்கண (உபலக்ஷண) மா-க் குறிக்கும்.

11. காரியவாகு பெயர்: காரியவாகு பெயராவது ஒரு காரியத்தின் பெயர், அதன் கருவிக்கு ஆகி வருவது. இது கருவியாகு பெயருக்கு எதிர்.

உ-ம்.

-

வளை ஒலித்தது இதில் வளை (வளையல்) என்னும் அணிப் பெயர் அதன் கருவியாகிய சங்கிற்கு ஆகி வந்தது.

இலக்கணம் படித்தான் என்பதில் இலக்கணம் என்பது அதை அறி வித்தற்குக் கருவியாகிய நூலைக் குறித்தலின் காரியவாகு பெயர்.

12. கருத்தாவாகு பெயர்: கருத்தாவாகு பெயராவது ஒரு கருத்தா வின் பெயர் அக் கருத்தாவாற் செ-யப்படும் பொருளுக்கு ஆகி வருவது. கருத்தா செ-வோன்.

உ-ம்.

கம்பரைக் கற்றான் - இதில் கம்பர் என்னும் கருத்தாப் பெயர் அவராற் செ-யப்பட்ட நூலுக்கு ஆகி வந்தது.

13. உவமையாகு பெயர்: உவமையாகு பெயராவது ஓர் உபமானத்தின் பெயர் அதன் உபமேயத்திற்கு ஆகி வருவது.

உ-ம். காளை வந்தான் - இதில் காளை என்னும் விலங்குப் பெயர் அதைப்போல் வீரத்திற் சிறந்த மனிதனுக்கு ஆகி வந்தது.

14. பண்பியாகு பெயர் அல்லது குணியாகு பெயர்: ஒரு பண்பியின் பெயர் அதன் பண்பிற்கு ஆகி வருவது. பண்பையுடையது பண்பி; குணத்தை யுடையது குணி.