உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

உ-ம்.

இயற்றமிழ் இலக்கணம்

சாம்பல் வாழை, புலிக்கொடி, சாம்பல் புலி என்னும் குணிப் பெயர்கள் அவற்றின் குணங்களாகிய நிறத்திற்கும் வடிவிற்கும் ஆகி வந்தன.

15. சின்னவாகு பெயர்: சின்னவாகு பெயராவது ஒரு சின்னத்தின் பெயர் அதையுடைய ஆளுக்கு அல்லது தொழிலுக்கு ஆகி வருவது.

சின்னம் - அடையாளம்.

உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டான் என்பதில் குடை என் பது, அதையுடைய அரசிற்கு ஆகி வந்தது.

ஆகுபெயர்கள், பெரும்பான்மை ஒரு சொல்லாகவும் சிறுபான்மை ரு சொல்லாகவும் மிருக்கும். இரு சொல்லாயிருப்பன அடையடுத்த ஆகுபெயர்க ளெனப்படும்.

ரு

உ-ம். வெற்றிலை, மருக்கொழுந்து.

ஆகுபெயர்கள் ஒரு முறையன்றிப் பலமுறை மேன்மேற் பல பொருள் களுக்கு ஆகி வருவதுண்டு. அவை இருமடியாகு பெயர், மும்மடியாகு பெயர் எனக் கூறப்படும்.

மடித்தல் மடக்குதல்.

உ-ம். தோகை வந்தாள் - தோகை என்னும் சினைப்பெயர் முதலா வது சினையாகு பெயரா- மயிலையும், பின் உவமையாகு பெயரா- பெண்ணையும் குறித்தலின் இருமடியாகுபெயர்.

கார் அறுத்தார்கள்

-

கார் என்னும் நிறப்பெயர் முதலாவது குணவாகு பெயரா- மேகத்தையும், பின்பு, காலப்பொருளாகுபெயரா-க் கார்காலத்தை யும், பின்பு காலவாகுபெயரா-க் கார்காலத்தில் விளையும் பயிரையும் குறித்தலின் மும்மடியாகு பெயர்.

ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு:

ஆகுபெயர்

1. தொன்றுதொட்டு வரும்

நியதிப்பெயர்.

2. பெரும்பான்மை ஒரு சொல்லாயும் சிறுபான்மை இரு சொல்லாயு மிருப்பது.

அன்மொழித் தொகை

புதிதுபுதிதா- ஆக்கப்படும்

நியதியில்லாத பெயர். எப்போதும் இருசொல்லா யிருப்பது.