உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

7.

பொருள்முத லாறோ டளவைசொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள்

ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகு பெயரே.

வேற்றுமை

107

(நன்.சூ.290)

16. முதல் வேற்றுமை: பெயரின் இயல்பே முதல் வேற்றுமை. அதன் பொருள் கருத்தாப் பொருள். அது பெயரையும், வினையையும் பயனிலை யாகக் கொண்டு முடியும். வினா, பெயருள்ளும் வினையுள்ளும் அடங்குத லின் தனிப் பயனிலை யன்று.

கருத்தா, தொழிலைச் செ-பவன். கருத்தா, செ-பவன், எழுவா-, வினைமுதல் என்பன ஒரு பொருட் சொற்கள்.

உ-ம். அவன் இராமன் - பெயர்ப் பயனிலை.

இராமன் வந்தான் - வினைப் பயனிலை.

யார் என்னும் வினா பெயராயும், வந்தானா என்னும் வினா வினை யாயுமிருத்தலின், வினா தனிப் பயனிலையன்மை காண்க.

கருத்தா இயற்றுதற் கருத்தா, ஏவுதற் கருத்தா என இருவகைப்படும். இயற்றுதற் கருத்தா தானே ஒரு வினையைத் தன் கைப்படச் செ-பவன். ஏவுதற் கருத்தா தன் ஆணையாலும், பொருளாலும் பிறரை ஏவி ஒரு வினை யைச் செ-விப்பவன்.

உ-ம்.

தச்சன் அரண்மனை கட்டினான் - இயற்றுதற் கருத்தா. அரசன் அரண்மனை கட்டினான் - ஏவுதற் கருத்தா.

முதல் வேற்றுமை பெயரளவா- நிற்றலின் பெயர் வேற்றுமை யென் றும், எழுவாயா - நிற்றலின் எழுவா-வேற்றுமை யென்றும் கூறப்படும். 8. எழுவா யுருபு திரிபில் பெயரே

வினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே.

(நன்.சூ.295)

17. இரண்டாம் வேற்றுமை: இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ'. அதன் பொருள் செயப்படுபொருள். அஃது ஆக்கல், அழித்தல், அடைத் தல், நீத்தல், ஒத்தல், உடைமை முதலியவாகப் பல வகைப்படும்.