உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இயற்றமிழ் இலக்கணம்

உ-ம்.

சத்திரத்தைக் கட்டினான் - ஆக்கல். கட்டடத்தை இடித்தான் - அழித்தல்.

ஊரை அடைந்தான் - அடைதல். குறையை நீக்கினான் - நீத்தல். புலியை நிகர்த்தான் ஒத்தல். அறிவை உடையான் - உடைமை.

புகழை விரும்பினான் - விருப்பம்.

செயப்படுபொருள் செ-பொருள் என்றும் சுருக்கிக் கூறப்படும். ரண்டாம் வேற்றுமைக்குச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் பெயர்.

9. இரண்டா வதனுரு பையே அதன்பொருள்

ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்

ஒத்தல் உடைமை ஆகி யாகும்.

(நன். சூ.296)

18. மூன்றாம் வேற்றுமை: மூன்றாம் வேற்றுமை உருபு ஆல், ஆன், ஓடு, ஓடு என்பன. அவற்றின் பொருள் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என்பன.

ஆல், ஆன் என்பன கருவி கருத்தாப் பொருள்கட்கும், ஒடு, ஓடு என்பன உடனிகழ்ச்சிப் பொருளுக்கும் சிறந்தவை.

கருவி முதற்கருவி யென்றும், துணைக் கருவி யென்றும் இரு வகைப்படும். முதற்கருவி பின்பு காரியமாக மாறுவது. துணைக் கருவி, முதற்கருவி காரியப்படுமட்டும் துணைநின்று, பின்பு பிரிந்து நிற்பது. கருவி,

காரணம்.

கருத்தா, முதல் வேற்றுமைக் கருத்தாப் போலவே இயற்றுதற் கருத்தா, ஏவுதற் கருத்தா என இருவகைப்படும்.

உடனிகழ்ச்சியாவது ஒரு பொருளின் தொழில் இன்னொரு பொரு ளின் தொழிலோடு உடனிகழ்வது.

உ-ம்.

மண்ணாற் செ-த குடம் - முதற் கருவி உளியாற் செ-த பெட்டி - துணைக் கருவி

கருவி.

கொத்தனாற் கட்டப்பட்டது கோயில் - இயற்றுதற் கருத்தா

அரசனாற் கட்டப்பட்டது கோயில் ஏவுதற் கருத்தா

இராமனோடு இலக்குமணன் சென்றான் - உடனிகழ்ச்சி.

கருத்தா

இராமன் செலவோடு இலக்குமணன் செலவும் உடனிகழ்தல் காண்க.