உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

109

முதல் வேற்றுமைக் கருத்தாவிற்கும், மூன்றாம் வேற்றுமைக் கருத்தா விற்கும் வேறுபாடு:

1. முதல் வேற்றுமைக் கருத்தா உருபின்றி எழுவாயா- நிற்கும். மூன் றாம் வேற்றுமைக் கருத்தா வாக்கியத்திற் செயப்படுபொருள் எழுவாயா யிருக்கும்.

2. முதல் வேற்றுமைக் கருத்தா வாக்கியத்தில் கருத்தா எழுவாயா யிருக்கும்; மூன்றாம் வேற்றுமைக் கருத்தா வாக்கியத்திற் செயப்படுபொருள் எழுவாயா யிருக்கும்.

3. முதல் வேற்றுமைக் கருத்தா வாக்கியம் செ-வினை கொண்டு முடியும்; மூன்றாம் வேற்றுமைக் கருத்தா வாக்கியம் செயப்பாட்டுவினை கொண்டு முடியும்.

உ-ம்.

தச்சன் கோயிலைக் கட்டினான் - முதல் வேற்றுமைக் கருத்தா. தச்சனாற் கோயில் கட்டப்பட்டது - மூன்றாம் வேற்றுமைக்

கருத்தா.

மூன்றாம் வேற்றுமை, கருவி வேற்றுமை என்றுங் கூறப்படும்.

10. மூன்றா வதனுருபு ஆல்ஆன் ஓடுஓடு

கருவி கருத்தா உடன்நிகழ் வதன்பொருள்.

(நன்.சூ.297)

19. நான்காம் வேற்றுமை: நான்காம் வேற்றுமை உருபு 'கு'. அதன் பொருள் ஏற்றுக்கோடற்பொருள். அது கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை முதலிய பலவகைப்படும்.

நேர்ச்சி - நட்பு. தகவு - தகுதி. அதுவாதல் - ஒரு பொருள் இன்னொரு பொருளாதல், பொருட்டு -நிமித்தம்.

உ-ம். புலவர்க்குப் பரிசளித்தான் பாம்பிற்குக் கீரி பகை

சுந்தரர்க்கு நண்பர் சேரமான் பெருமான்

மன்னர்க்குத் தகும் மாளிகை

சோற்றுக்கு அரிசி

கூலிக்கு வேலை

சச்சந்தனுக்கு மகன் ஜீவகன்

தஞ்சைக்கு வடக்கு சிதம்பரம்

இல்லதிற்கு உள்ளது மேல்

வில்லுக்குச் சிறந்தவன் விசயன்

T

கொடை

பகை

நேர்ச்சி

தகவு

அதுவாதல் பொருட்டு

முறை எல்லை

ஒப்பு

ஏது