உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இயற்றமிழ் இலக்கணம்

இவையெல்லாம் இதற்கு இது எனப் பொதுவா- ஏற்றுக்கோடற் பொரு ளில் வந்தமை காண்க.

நான்காம் வேற்றுமை கொடை வேற்றுமை என்றும், கோளி வேற் றுமை என்றும் கூறப்படும். கோளி - கொள்வது.

11. நான்கா வதற்குரு பாகும் குவ்வே

கொடைபகை நேர்ச்சி தகவது வாதல்

பொருட்டுமுறை ஆதியின் இதற்கிதெனல் பொருளே.

(நன். சூ.298)

20. ஐந்தாம் வேற்றுமை: ஐந்தாம் வேற்றுமை உருபு இன், இல் என் பன ; அவற்றின் பொருள் விகற்பித்தல். விகற்பித்தலாவது இதனின் இஃது இத் தன்மையது என இருபொருளை வேறுபடுத்திக் கூறல். அது நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என நால்வகைப்படும்.

ஏது காரணம்.

உ-ம்.

மதுரையின் நீங்கினான்

நீங்கல்

காக்கையிற் கரிது களம்பழம்

ஒப்பு

தஞ்சையின் வடக்கு சிதம்பரம்

எல்லை

கல்வியிற் பெரியவன் கம்பன்

ஏது

ஒப்புப் பொருள் ஒப்புத்தரம் (positive degree), உறழ்தரம் (com- parative degree) என இரு வகைப்படும்; இவற்றுள் முன்னது உவமப் பொருவு என்றும் பின்னது உறழ்பொருவு என்றும் கூறப்படும். காக்கையிற் கரிது என்பது காக்கையைப் போலக் கரிது எனப் பொருள்படின் உவமப் பொருவாம்; காக்கையைவிடக் கரிது எனப் பொருள்படின் உறழ்பொருளாம்.

ஐந்தாம் வேற்றுமை நீக்க வேற்றுமை என்றும் கூறப்படும்.

12. ஐந்தாம் வதனுருபு இன்னும் இல்லும்

நீங்கல்ஒப் பெல்லை ஏதுப் பொருளே.

(நன். சூ.299)

21. ஆறாம் வேற்றுமை: ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ என்பன; அவற்றின் பொருள் கிழமை.

(கிழமை - உரிமை, உடைமை).

22. கிழமை தற்கிழமை, பிறிதின்கிழமை என இருவகைப்படும். தற் கிழமையாவது தன்னினின்றும் வேறாகப் பிரிக்கப்படாத கிழமை; பிறிதின் கிழமையாவது தன்னினிறும் வேறாகப் பிரிக்கப்படும் கிழமை.