உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

111

23. தற்கிழமை - பண்பு, உறுப்பு, ஒன்றன் கூட்டம், பலவின் ஈட்டம், திரிபின் ஆக்கம் என ஐவகைப்படும்; பிறிதின்கிழமை பொருள், இடம், காலம் என மூவகைப்படும்.

-

ஒன்றன் கூட்டம் ஒரே வகையான பொருளின் கூட்டம்; பலவின் ஈட்டம் – பல வகையான பொருளின் கூட்டம்; திரிபின் ஆக்கம் - ஒன்று திரிந்து மற்றொன்றாவது.

உ-ம்.

தற்கிழமை

1. பூவினது அழகு இராமனது போக்கு 2. சாத்தனது கை

3. புறாக்களது கூட்டம் 4. படைகளது தொகுதி 5. நெல்லினது பொரி

குணப் பண்புத் தற்கிழமை - தொழிற் பண்புத் தற்கிழமை - உறுப்புத் தற்கிழமை - ஒன்றன் கூட்டத் தற்கிழமை பலவின் ஈட்டத் தற்கிழமை - திரிபினாக்கத் தற்கிழமை

பிறிதின்கிழமை 1. முருகனது வேல்- வேல் - பொருட் பிறிதின்கிழமை

2. முருகனது மலை - இடப் பிறிதிதின்கிழமை

3. முருகனது நாள் - காலப் பிறிதின்கிழமை

இனி, புலவரது செ-யுள், செ-யுட்கிழமை என ஒரு தனிக் கிழமை யா-க் கூறப்படும்.

உ-ம்.

கம்பரது ராமாயணம்.

எனது உயிர் என்று சொல்லும்போது நான் என்னும் உடையவனும், உயிர் என்னும் உடைமையும் ஒன்றாயிருத்தலின் அது ஒன்றிய தற்கிழமை எனப்படும்.

குறிப்பு: ஆறாம் வேற்றுமை உருபுகளில் அது ஆது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் பண்டைக் காலத்தில் வழங்கிய வழக்கு இக்காலத்தில் இறந்துபட்டது.

ஆறாம் வேற்றுமை, கிழமை வேற்றுமை என்றும் கூறப்படும்.

13. ஆறன் ஒருமைக் கதுவும் ஆதுவும்

பன்மைக் கவ்வும் உருபாம்; பண்புறுப்

பொன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்க மாம்தற் கிழமையும்

பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே.

(நன்.சூ.300)