உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இயற்றமிழ் இலக்கணம்

24. ஏழாம் வேற்றுமை: ஏழாம் வேற்றுமை உருபுகள் கண், கால் முத லியன. அவற்றின் பொருள், இடப்பொருள். அறுவகைப் பொருளும் இரு ரு வகைக் கிழமையிற் பிற பொருள்கட்கு இடமா- டமா- நிற்கும்.

உ-ம். மரத்தின்கண் இலை - தற்கிழமை

-

மரத்தின்கட் பறவை பிறிதின்கிழமை

பொருள் இடமாயிற்று.

மலையின்கட் சிகரம் - தற்கிழமை

மலையின்கண் மூங்கில் - பிறிதின்கிழமை

}

இடம் இடமாயிற்று.

மாதத்தில் நாள் - தற்கிழமை

மாதத்தில் மழை பிறிதின்கிழமை

காலம் இடமாயிற்று.

விரலில் நகம் - தற்கிழமை

விரலில் மோதிரம் பிறிதின்கிழமை

சினை இடமாயிற்று.

வடிவிற் சிறுமை - தற்கிழமை

இளமையிற் செல்வம் - பிறிதின்கிழமை

குணம் இடமாயிற்று.

ஆட்டத்தில் அபிநயம் - தற்கிழமை

தொழில் இடமாயிற்று.

ஆட்டத்திற் பாட்டு - பிறிதின்கிழமை

ஏழாம் வேற்றுமை இடவேற்றுமை என்றும் கூறப்படும்.

14. ஏழன் உருபுகண் ஆதி யாகும்

பொருள்முத லாறும் ஓரிரு கிழமையின்

இடனா- நிற்றல் இதன்பொருள் என்ப.

(நன்.சூ.301)

25. எட்டாம் வேற்றுமை: எட்டாம் வேற்றுமையாவது பெயரின் விகாரம்; அதன்பொருள் விளிப்பொருள்.

(விளித்தல் அழைத்தல்.)

26. விளி ஏற்கும் பெயர் ஈறு திரிதல், ஈறு குன்றல், ஈறு மிகுதல், இயல்பு, ஈற்றயல் திரிதல் என்னும் விகாரங்களை அடையும்.

ஈற்றயல் திரிதல் - கடைசிக்கு முந்தின எழுத்து வேறுபடுதல்.

உ-ம். தந்தை – தந்தா-, தம்பி - தம்பீ - ஈறு திரிதல்.

அன்பன் - அன்ப, அரசன் - அரச - ஈறு குன்றல்.

மகன் - மகனே, தா--தாயே ஈறு மிகுதல்.

சுந்தரம் - சுந்தரம், தம்பி - தம்பி - இயல்பு.

மக்கள் - மக்காள், புலவர் - புலவீர் -ஈற்றயல் திரிதல்.

நீண்டு விளிக்கும் பெயர்களெல்லாம் அளபெடுத்தே விளிக்கும்.

உ-ம்.

இராமாஅஅ.