உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இயற்றமிழ் இலக்கணம்

iii. செ-வினைக்கும் செ-யப்பாட்டு வினைக்கும் பொதுவினை

உ-ம்.

உ-ம்.

வந்த -

து

இராமன் என்பான் - இது இராமன் என்று சொல்கிறவன் என்று பொருள்படின், என்பான் என்பது செ-வினை, இராமன் என்று சொல்லப்படுகிறவன் என்று பொருள்படின் என்பான் என்பது செயப்பாட்டு வினை.

2. பலசொற் பொதுவினை

(1) வந்த - பெயரெச்சம்.

(2) வந்தன - பலவின்பாற் படர்க்கை வினைமுற்று. (3) வந்தவை - வினையாலணையும் பெயர்.

தழைப்ப - (1) தழைக்க - நிகழ்கால வினையெச்சம்.

(2) தழைப்பர் - பலர்பாற் படர்க்கை வினைமுற்று. (3) தழைப்பன - பலவின்பாற் படர்க்கை வினைமுற்று.

செ-யும் - (1) செ-யும் (பையன்) - எதிர்காலப் பெயரெச்சம். (2) (நீர்) செ-யும் - ஏவற் பன்மை.

(3) (அது) செ-யும் - ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்று.

செ-யா (1) செ-கின்றான் - நிகழ்கால வினைமுற்று.

நின்றான் -(2) செ-து நின்றான் - உடன்பாட்டு வினையெச்சத் தொடர். (3) செ-யாமல் நின்றான் - எதிர்மறை வினையெச்சத் தொடர்.

ஓடிய (1) ஓடின - இறந்தகாலப் பெயரெச்சம்.

(2) ஓடின - பலவின்பாற் படர்க்கை வினைமுற்று.

(3) ஓடுதற்கு எதிர்கால வினையெச்சம்.

(4) ஓடுக - வியங்கோள் வினை.

இங்ஙனமே பிறவும்.

3. இருதிணைப் பொதுவினை

28. தன்மைவினை, முன்னிலைவினை, வியங்கோள் வினை, வேறு, இல்லை, உண்டு என்னும் குறிப்பு வினைமுற்றுகள், பெயரெச்சம், வினை யெச்சம் ஆகிய இவையெல்லாம் இருதிணைக்கும் பொதுவான வினை களாம். இவற்றுள் தன்மை வினையும் முன்னிலை வினையும் இருதிணைக் கும் மட்டும் பொதுவாம். ஏனைய வெல்லாம் இருதிணை ஐம்பால் மூவிடங் கட்கும் பொதுவாம்.