உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

135

யினமாகிய மூவினங்களும் வருமொழி முதலில் வர, முறையே ஆ-தமும் மெல்லினமும் இயல்பும் ஆகும். இஃது அல்வழிப் புணர்ச்சி.

உ-ம்.

அவ் + கடிய = அஃகடிய - வலிவர ஆ-தமாயிற்று.

அவ் + ஞான்றன = அஞ்ஞான்றன - மெலிவர மெலிவாயிற்று. அவ் + யாவை = அவ்யாவை - இடைவர இயல்பாயிற்று. இங்ஙனமே இவ், உவ் என்பவற்றோடும் ஒட்டுக.

43.

சுட்டு வகரமூ வினம்உற முறையே

ஆ-தமும் மென்மையும் இயல்பும் ஆகும்.

(நன்.சூ.235)

65. வகர மெ-யீற்றுச் சுட்டுப் பெயர்கள் வேற்றுமை யுருபேற்கும்

போது 'அற்று' ச் சாரியை பெறும்.

உ-ம்,

அவ் + ஐ = அவற்றை.

இவ் + ஐ = இவற்றை.

உவ் + ஐ = உவற்றை.

இனி 'அற்று'ச் சாரியையோடு 'இன்' சாரியை பெறுதலுமுண்டு.

உ-ம்.

அவற்றினை, இவற்றினை.

44.

வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே.

(நன்.சூ.250)

4. திரிதலும் இயல்பும் மிகுதலும் கெடுதலும்

இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி

66. இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி இயல்பாக வேண்டியவிடத்து விகாரப்பட்டும், விகாரப்பட வேண்டிய விடத்து இயல்பாகியும், உயர்திணைப் பெயரினிடத்து உருபு விரிந்தும் தொக்கும், இன்னும் இவை போன்றே வேறு சில விகாரங்களை யடைந்தும் வரும்.

உ-ம். நின் + புறங்காப்ப = நிற்புறங்காப்ப 'நின்னீ றியல்பாம்' என்ற விதிப்படி இயல்பாக வேண்டியவிடத்து விகாரப்பட்டது.

மண் + சுமந்தான் = மண் சுமந்தான்.

பொன் + கொடுத்தான் = பொன் கொடுத்தான்.

ணனவல் லினம்வரட் டறவும்' என்ற விதிப்படி விகாரப்பட வேண்டியவிடத்து இயல்பாயிற்று.