உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இயற்றமிழ் இலக்கணம்

நம்பியைத் தொழுதான் - உயர்திணையிடத்து உருபு விரிந்தது. மகன் + பெற்றான் = மகற்பெற்றான் - உயர்திணையிடத்து உருபு தொக்கது.

'பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்க வீற்றுமெ-' என்னும் சூத்திர விதிப்படி இயல்பாக வேண்டியவிடத்து உருபு விகாரப் பட்டது கொற்றனைக் கண்டான் - விரவுப் பெயரிடத்து உருபு விரிந்தது.

ஆண் பெற்றான் - விரவுப் பெயரிடத்து உருபு தொக்கது.

தன் + கொண்டான் = தற்கொண்டான் - விகற்பித்து வரவேண்டிய விடத்துத் திரிந்தே வந்தது.

இப் புணர்ச்சிகளெல்லாம் விதிக்குமாறானவை யாதலின், சிறுபான்மை யெனக் கொள்க.

45.

இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும் உயர்திணை யிடத்து விரிந்தும் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்தும் நின்றும் அன்ன பிறவும் ஆகும் ஐ உருபே.

யாப்பியல்

உறுப்பிலக்கணம்

(1560T.. 255)

67. தொடை செ-யுளின் அடிகளிலும் சீர்களிலும் எழுத்தும் சொல் லும் பொருளும் அழகாகத் தொடுக்கப்படுவது தொடையாகும். அது மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என ஐவகைப்படும். அவற்றுள் மோனையும் எதுகையும் மிகச் சிறந்தனவாகும்.

68. மோனை: மோனை என்பது செ-யுளின் பல அடிகளிலுள்ள முதற் சீர்களிலாவது, ஓர் அடியிலுள்ள பல சீர்களிலாவது முதலெழுத்து ஒன்றிவருதல். அஃது ஓர் எழுத்துத் தானே ஒன்றிவருதலும், அதன் கிளையெழுத்து ஒன்றி வருதலும் என இருவகை.

முகம் முகன் - முகனை -

-

மோனை. சீரின் முகத்தில் (முதலில்) நிற்

கும் எழுத்து மோனை யெனப்பட்டது.

கிளையெழுத்து

1.அ,ஆ,ஐ,ஔ

2. இ, ஈ, எ, ஏ, ய

3.2, 26T,

ஒ,

4. ஞ, ந 5.ம.வ

6. த. ச