உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

137

மோனை ஓர் அடியிலுள்ள பல சீர்களில் வரின், சீர்மோனை என் றும், பல அடிகளின் முதற் சீர்களில் வரின் அடிமோனை என்றும், ஓர் அடி யிலுள்ள எல்லாச் சீர்களிலும் வரின் முற்றுமோனை என்றுங் கூறப்படும்.

உ-ம்.

சீர்மோனை

தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது.

இதில் முதலடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் த, தா என்னும் முத லெழுத்துகள் மோனை; இரண்டாமடியில் முதற் சீரிலும், இரண்டாம் சீரி லும் ம,மா என்னும் முதலெத்துகள் மோனை. இங்ஙனம் ஓரடியிற் பல சீர் களில் வருவது சீர்மோனை.

அடிமோனை

'அணிமலர் அசோகின் தளிர்நலங் கவற்றி அரிகுரற் கிண்கிணி அரற்றுஞ் சீரடி.'

இதில் முதலடி முதற்சீரிலும், இரண்டாமடி முதற்சீரிலும் அகரத்திற்கு அகரம் மோனையாயிற்று, இங்ஙனம் பல அடிகளில் முதலில் வருவது அடி மோனை.

முற்றுமோனை

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு.

இதில் முதலடியில் நான்கு சீர்களிலும் மோனை வந்ததால் முற்று மோனை.

எதுகை

69. எதுகையாவது பல சீர்களில் முதலெழுத்து அளவொத்து இரண் டாமெழுத்து ஒன்றி வருவது. அஃது ஓரடியிற் பல சீர்களில் வரின் சீர்எதுகை என்றும், பல அடிகளின் முதற் சீர்களில் வரின் அடிஎதுகை யென்றும், ஓரடி யிலுள்ள எல்லாச் சீர்களிலும் வரின் முற்றெதுகை யென்றுங் கூறப்படும்.

உ-ம்.

சீரெதுகை

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

இதில் முதலடியில் முதற்சீரும், மூன்றாஞ்சீரும் எதுகையா-வந்தன.