உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இயற்றமிழ் இலக்கணம்

அடியெதுகை

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்

கென்புதோல் போர்த்த வுடம்பு.

இதில் முதலடி முதற்சீரும், இரண்டாமடி முதற்சீரும் எதுகையா- வந்தன.

முற்றெதுகை

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழை.

இதில் முதலடியில் எல்லாச் சீர்களும் எதுகையா வந்தன.

தளை

70. இரு சீர்கள் ஒன்றாகப் புணரும்போது இடையில் உண்டாகும் சைப்பிணிப்புத் தளை எனப்படும்.

தட்பது தளை; தட்டல் - பிணித்தல், கட்டுதல்.

புணருகின்ற இரு சீர்களில் நிலையைப்பற்றியே தளை கவனிக்

கப்படும்.

71. தளை வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என நால்வகைப்படும். அவற்றுள் வெண்டளை (வெண்பாவிற்குரிய தளை) இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இருவகைப்படும்.

72. இயற்சீர் வெண்டளையாவது ஈரசைச் சீர்களாகிய இயற்சீர்கள் தம்மோடும். பிறவோடும் புணரும்போது, நிலைச்சீரின் ஈற்றசையும் வருஞ் சீரின் முதலசையும், நேருக்கு நிரையும் நிரைக்கு நேருமாக மாறுபட்டு நிற்பது. இது 'மா முன் நிரை,' ‘விள முன் நேர்' என்னும் வா-பாடுகளாற் கூறப்படும்.

உ-ம். 'அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்'

இதில் 'அறம்பொருள்' கருவிளம் என்னும் வா-பாட்டு இயற்சீர்; அது நிரையசையில் முடிந்தது. அடுத்த சீர் ‘னின்' என நேரசையில் தொடங் கிற்று. 'இன்பமும்' கூவிளம் என்னும் வா-பாடு இயற்சீர்; அது நிரையசை யில் முடிந்தது. அடுத்த சீர் ‘வீ ' என நேரசையில் தொடங்கிற்று. 'வீடும் ' தேமா என்னும் வா-பாட்டு இயற்சீர்; அது நேரசையில் முடிந்தது. அடுத்த சீர் ‘பயக்’ என்னும் நிரையசையில் தொடங்கிற்று. இங்ஙனம் மா முன் நிரையும், விள முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை.