உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

139

73. வெண்சீர் வெண்டளையாவது மூவசைச் சீர்களாகிய வெண்பா உரிச்சீர்களின்பின், வருஞ் சீரின் முதலசை நேரசையாக நிற்பது. இது நேருக்கு நேராகும். ஆதலின் 'கா- முன் நேர்' என்னும் வா-பட்டால் கூறப்படும்.

உ-ம்.

'தனக்குவமை யில்லாதான்' - இதில் முதல் சீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் நேருக்கு நேராயினமை காண்க.

செ-யுளிலக்கணம்

பா

க.வெண்பா

74. அசைச்சீராலும், இயற்சீராலும், வெண்சீராலும், இருவகை வெண் டளையும் தட்டு, ஈரடி முதல் பன்னீரடி வரையும், ஈற்றடி சிந்தடியா- ஏனை யடிகள் அளவடியா - வருவது வெண்பாவாகும்.

ஈரடியால் வரும் வெண்பா குறள் வெண்பா வென்றும், மூவடியால் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா வென்றும், நாலடியால் வரும் வெண்பா அளவியல் வெண்பா வென்றும், ஐந்தடி முதற் பன்னிரண்டடி வரை வரு வது பஃறொடை வெண்பா வென்றுங் கூறப்படும்.

அளவியல் வெண்பா நேரிசை வெண்பா வென்றும் இன்னிசை வெண்பா வென்றும் இருவகைப்படும். மோனை எதுகை நிரம்பின் நேரிசை வெண்பாவும், நிரம்பாவிடின் இன்னிசை வெண்பாவும் ஆகும்.

வெண்பாவின் ஈற்றுச்சீர் அசைச்சீராகவும் இயற்சீராகவு மிருக்கும். மூவசைச் சீர் வெண்பாவின் ஈற்றில் வராது. அசைச்சீர் வெண்பாவில் ஈற் றில் மட்டும் வரும். வெண்பாவின் ஈற்றுச்சீர் இயற்சீராயின் 'காசு' 'பிறப்பு' என்னும் வா-பாடுகளி லொன்றா-க் குற்றியலுகர வீறாயிருத்தல் வேண் டும். முற்றிய லுகர வீறாயினும் குற்றமின்று.

வெண்பா, பிற பாக்களுக்குரிய சீரும் தளையும் அடியும் விரவாது தூ -மையாயிருக்கும் பா. வெண்மை, தூ-மையை உணர்த்தும். பா -பாட்டு.

1. குறள் வெண்பா

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் - குட்டை. வெண்பாக்களிற் குறுகியது குறள் எனப்பட்டது. இதற் குக் குறுவெண்பாட்டு என்று பெயர்.