உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

2. சிந்தியல் வெண்பா

சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை.

சிந்து - சிறிது, குட்டை.

3. நேரிசை வெண்பா

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லா- மணலின் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலுந்தன் வாயாற் கெடும்.

இயற்றமிழ் இலக்கணம்

இதில், முதலடி முதற்சீரும், இரண்டாமடி முதற் சீரும், இரண்டாமடி இறுதிச் சீரும் ஓரெதுகையா வந்தன. மூன்றாமடி முதற்சீரும், நான்காமடி முதற்சீரும் மற்றோரெதுகையா- வந்தன. இங்ஙனம் நேரிசை வெண்பா வில் எதுகைக்குரிய சீர் மொத்தம் ஐந்தாகும். இவ் வைந்தும் ஒரே எதுகை யா- வரின் மிகச் சிறப்பாகும், எதுகைக்கு விகற்பம் என்றும் பெயர். இரண் டாம் அடி யீற்றுச்சீர் தனியா-வரின் தனிச் சீர் எனப்படும். மோனை, எதுகை என்னும் இரண்டனுள் எதுகையே நேரிசை வெண்பாவிற்கு இன்றியமையாத தாகும்.

4. இன்னிசை வெண்பா

இசைவ கொடுப்பதூஉ மில்லென்ப தூஉம் வசையன்று வையத் தியற்கை யஃதன்றிப் பசைகொண் டவனிற்கப் பாத்துண்ணா னாயின்

நசைகொன்றான் செல்லுலக மில்.

இதில் இரண்டாமடி ஈற்றுச் சீர் எதுகையா வராமையின், எதுகை குறைந்து இன்னிசையாயிற்று.

5. பஃறொடை வெண்பா

வையக மெல்லாங் கழனியா - வையகத்துச்

செ-யகமே நாற்றிசையின் தேயங்கள் - செ-யகத்து

வான்கரும்பே தொண்டை வளநாடு - வான்கரும்பின்

சாறேயந் நாட்டுத் தலையூர்கள் - சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாங் - கட்டியுட் டானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்.